உலக நெருக்கடிக்கான முஸ்தீபுகளா ? அதிகாரப் போராட்டத்தின் பாசாங்குகளா?

Published By: Digital Desk 4

19 Dec, 2021 | 09:26 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

மீண்டும் உக்ரேனிய நெருக்கடி ஊடகங்களின் பேசுபொருளாகி இருக்கிறது. உக்ரேனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான பொது எல்லையில் நிலவும் பதற்றம் பற்றி ஊடகங்கள் பேசுகின்றன. பொது எல்லைக்கு அருகில் ரஷ்யா படைகளைக் குவித்திருப்பதாக அமெரிக்காவும், ஐரோப்பாவும் குற்றம் சாட்டுகின்றன.

இந்தப் படைகள் எந்தவொரு தருணத்திலும் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என்று மேலைத்தேய ஊடகங்கள் ஊகம் வெளியிடுகின்றன. அடுத்தாண்டு முற்பகுதியில் ஆக்கிரமிப்பு நிகழக்கூடும் என்ற தொனியில் மேலைத்தேய புலனாய்வு நிறுவனங்கள் எதிர்வுகூருகின்றன.

இத்தகைய ஆக்கிரமிப்பு பிராந்திய நெருக்கடியாக பரிணமிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் முதலான அமைப்புக்கள் எச்சரிக்கின்றன. ஆக்கிரமிக்கப் போவதில்லையென ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புட்டீன் வலியுறுத்துகிறார்.

துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் என்ற நிறந்தீட்டப்பட்ட சாளரம் ஊடாக, இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இதன் காரணமாகரூபவ் இதன் உண்மையான தோற்றம் எமக்குத் தெரிவதில்லை. சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற தேசமாக உக்ரேன் திகழ்கிறது. ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக பலம்பொருந்திய குடியரசாகவும் இருக்கிறது.

உக்ரேனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையில் ஏராளமான தொடர்புகள் உண்டு. கலாசாரம், மொழி சார்ந்த தொடர்புகள் முக்கியமானவை. மேற்குத் திசையில் ஐரோப்பிய நாடுகளும்ரூபவ் கிழக்குத் திசையில் ரஷ்யாவும் உள்ள தேசம் தான் உக்ரேன். இந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளவர்கள்ரூபவ் கூடுதலாக உக்ரேனிய மொழியைப் பேசுவார்கள். இங்கு உக்ரேனிய தேசியவாதிகளின் செல்வாக்கு அதிகம். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் அதிகமாக ரஷ்ய மொழி புழக்கத்தில் உள்ளது.

இங்கு ரஷ்ய கலாசாரத்தின் செல்வாக்கு அதிகம். இந்த செல்வாக்கு அத்துமீறியதாகவும் இருப்பதுண்டு. இந்தப் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக மேலைத்தேய நாடுகளும், ரஷ்யாவும் உக்ரேன் மீது போட்டி போட்டுக் கொண்டு ஆதிக்கம் செலுத்த முனைவது வழக்கமானதாகும்.

உக்ரேனை மையமாகக் கொண்டு, மேற்குலகிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் நிகழும் பனிப்போர்; 2013ஆம் ஆண்டு உச்சத்தைத் தொட்டது. இவ்வாண்டின் நவம்பர் மாதம் மேலைத்தேய நாடுகளின் ஆதரவுடன், உக்ரேனிய தேசியவாதிகள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போதுரூபவ் ரஷ்யாவின் ஆதரவைப் பெற்ற விக்டர் யனுக்கோவிச் என்பவர் ஜனாதிபதியாக இருந்தார்.

உக்ரேனை எப்படியாவது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இணைத்துக் கொண்டு, ஐரோப்பிய நாடாக மாற்றி விட வேண்டும் என்று மேலைத்தேய சமூகம் ஆசைப்பட, ஜனாதிபதி விக்டர் யனுக்கோவிச் மாறுபட்ட தீர்மானத்தை எடுத்தார். ரஷ்யா தலைமையிலான ‘யூரோ-ஏசிய’ பொருளாதார ஒன்றியத்தில் இணைவதென அவர் முடிவு செய்தார்.

இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டங்கள் உச்சத்தைத் தொட்டன. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும், உக்ரேனிய பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி யனுக்கோவிச் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னால் இருந்த மேற்குலகை ரஷ்யா பழிவாங்கிய விதம் சுவாரஷ்யமானது. உக்ரேனில் கிரைமியா என்றொரு பிராந்தியம் உள்ளது. இதில் வசிப்பவர்கள் ரஷ்ய மொழியைப் பேசுபவர்கள். அந்நாட்டு கலாசாரத்திற்கு நெருக்கமானவர்கள். இந்தப் பிராந்தியத்தை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துரூபவ் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அதாவது, உக்ரேனிய குடியரசின் இறையாண்மைக்கு உட்பட்ட பிராந்தியம் ரஷ்யாவின் வசமானது. புட்டீன் இன்னொரு விஷயத்தையும் செய்தார். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய இனக்குழுமத்தைச் செறிந்து வாழ்கிறார்கள். ரஷ்ய ஜனாதிபதி இங்குள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆயதங்களை வழங்கி உதவி செய்துரூபவ் உக்ரேனிய தேசியவாதிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தச் செய்தார்.

கிரைமியா என்ற பிராந்தியம், ரஷ்யாவின் ஆளுக்கு உட்பட்டதை அடுத்து, இரு விஷயங்கள் நிகழ்ந்தன. ரஷ்யாவிற்குள் விளாத்திமிர் புத்தினின் புகழ் மேலோங்கியது. இந்தப் பிராந்தியத்திலுள்ள கடற்பரப்பில் ரஷ்யாவின் கை மேலோங்கியது. அமெரிக்காவும்ரூபவ் ஐரோப்பாவும் தோற்று நின்றன. அவை ரஷ்யாவின் மீது தடைகளை விதித்தன.

இங்கு மேலைத்தேய நாடுகளின் தந்திரத்தைக் கவனிக்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்று உக்ரேன் தனியொரு குடியரசாக மாறியபோது, அது உக்ரேனிய மக்களின் சுதந்திர தாகம் என்றன. உக்ரேனின் இறையாண்மை பற்றி பேசின. காலப்போக்கில்ரூபவ் பாதுகாப்பு ரீதியான நகர்வுகளின் மூலமும்ரூபவ் தந்திரமான செயல்களின் மூலமும் உக்ரேனைத் தம்பக்கம் ஈர்த்துக் கொள்ளப் பார்த்தன.

இன்றும் கூட உக்ரேனிய எல்லைக்கு அருகில் அமெரிக்காவின் ஏவுகணைகள் உண்டு. அமெரிக்கா நினைக்கும் பட்சத்தில், சில நிமிடங்களுக்குள் உக்ரேனின் நிலப்பரப்பில் எந்தவொரு புள்ளியையும் தாக்கக்கூடிய ஆற்றல்ரூபவ் இந்த ஏவுகணைகளுக்கு உண்டு.

இதுதவிர, நேட்டோ அமைப்பிற்குள் உக்ரேனைக் கொண்டு வருவதன் மூலம், அதை ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தும் எத்தனங்களை மேலைத்தேய நாடுகள் எப்போதும் செய்து கொண்டு தானிருக்கின்றன. உக்ரேனிய மக்கள் மத்தியில் நிலவும் மொழிப் பிரச்சினையைத் தீவிரமாக்கி, உக்ரேனிய தேசிய சிந்தனையைத் தூண்டுவதும், இதன் அடிப்படையில் மக்களை ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதும் ஐரோப்பிய நாடுகளின் தந்திரம். எனவேரூபவ் தமது பிடியில் இருந்து உக்ரேன் விட்டுச் சென்று விடக்கூடாது என்பதற்காக, விளாத்திமிர் புத்தினும் பல்வேறு வியூகங்களை வகுப்பது வழக்கம். இதனொரு கட்டமாக, படைக்குவிப்பு என்பதையும் பார்க்கலாம். உக்ரேனைத் தம்பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காக தாம் மேற்கொள்ளும் அத்துமீறல்களையும், தந்திரங்களையும் சூசகமாக மறைத்து விட்டு, ரஷ்ய அதிபரை போர்வெறி பிடித்தவராக சித்தரிக்க முனைவது தான் மேலைத்தேய நாடுகளின் சிறப்பான வியூகம் எனலாம்.

இந்த வியூகத்திற்குத் துணைபோகும் மேலைத்தேய ஊடகங்கள் ரஷ்ய ஜனாதிபதியை பெரும் குற்றவாளியாக சித்தரிக்க முனைவது வழக்கம். அதேபோல், இத்தகைய ஊடகங்கள் வாயிலாக உக்ரேனிய - ரஷ்ய நெருக்கடியை அவதானிப்பவர்களுக்கு அவர் வில்லனாகத் தென்படுவதும் வழமையே. சமகால களநிலவரத்தின் பிரகாரம்ரூபவ் உக்ரேன் நேட்டோவிற்குள் உள்ளீர்க்கப்பட மாட்டாதென ரஷ்ய ஜனாதிபதி உத்தரவாதம் கேட்கிறார். அத்தகைய உத்தரவாதத்தை வழங்க அமெரிக்க ஜனாதிபதி தயாராக இல்லை. இருதரப்பிற்கும் இடையிலான முரண்பாட்டை அடுத்துரூபவ் உக்ரேனுடனான பொது எல்லைக்கு அருகில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

ஏதோவொரு கட்டத்தில் உக்ரேனை ஆக்கிரமிக்குமாயின்ரூபவ் அதனால் கூடுதலாக பாதிக்கப்படுவது ஐரோப்யி நாடுகள் தான். ஏனெனில், ரஷ்யாவில் இருந்து எரிவாயுவைக் காவிச் செல்லும் குழாய்கள்ரூபவ் உக்ரேன் ஊடாகவே ஜெர்மனிக்குள் செல்கின்றன. எரிவாயு விநியோகம் துண்டிக்கப்படுமானால்ரூபவ் அதன்மூலம் ஜேர்மனி மாத்திரமன்றிரூபவ் பிரான்ஸ் போன்ற நாடுகளும் பாதிக்கும். இத்தகைய பாதிப்பு ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் எதிரொலிக்கக்கூடிய அபாயமும் உண்டு. எனவே, இந்தப் பிராந்தியத்தில் வல்லாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து. அமெரிக்கா காய்களை நகர்த்தினாலும் கூட,  இது எல்லை தாண்டிச் செல்ல முடியாது. ரஷ்யாவை எச்சரிப்பது போல பாசாங்கு காட்டலாம். அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம். அவ்வளவு தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54