பாராளுமன்ற அமர்வுக்கு முன் அமைச்சரவையில் மாற்றம் -பறிபோகும் நிலையில் மாற்றுக்கொள்கையாளர்களின் பதவிகள்

Published By: Digital Desk 4

19 Dec, 2021 | 02:18 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனவரி 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களை தவிர ஏனைய அமைச்சுக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. நாட்டின் பொருளாதார நிலமைகளை சீர் செய்து மக்களின் குறைகளை தீர்க்கா விடின் அடுத்து வரும் எந்த தேர்தலும் ஆளும் கட்சிக்கு நெருக்கடியாகவே அமையும் என பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறிப்பிட்டுள்ளனர். 

பாராளுமன்றத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தெரிவித்து சபையிலிருந்து  பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்பு | Virakesari.lk

எனவே ஜனவரியில் அமைச்சரவையில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் ஆளும் கட்சியின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்போகும் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே போன்று ஆளும் கட்சிக்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சித்தல் மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுதல் போன்ற காரணிகளை மையப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ள முக்கியஸ்தர்கள் சிலரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவுடனான யுகதனவி மின்னிலைய ஒப்பந்தத்தை விமர்சித்து செயற்படும் அமைச்சர்களான உதய கம்மன்பில , விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இந்த பட்டியலில் உள்ளதா குறிப்பிடப்படுகின்றது. அதே போன்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஷரித ஹேராத் அநுர பிரியதர்ஷன யாபா ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மை நாட்களாக வெளிப்படையாகவே அரசாங்கத்தை விமர்சிக்கும் சுதந்திர கட்சியின்  முக்கியஸ்தர்களும் குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அனைவரும் ஒரே நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு அல்லாது எதிர்மறையான நிலைப்பாட்டுடையவர்கள் முழுமையாகவே ஓரங்கட்டப்படும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே போன்ற பாராளுமன்ற குழுக்களின் தலைமை பதிவிகள் மற்றும் முக்கிய அரச நிறுவனங்கள் சிலவற்றின் தலைமை பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01