ஒமிக்ரோன் தொற்றாளரின் தொடர்புகள் குறித்த தகவல்களை தீவிரமாக திரட்டுகின்றோம் - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 3

18 Dec, 2021 | 11:46 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் புதிதாக இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நபர் ஆவார். குறித்த நபர் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் அவர் பயணித்துள்ள இடங்கள் தொடர்பான தகவல்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் சேகரிக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

புதிதாக இனங்காணப்பட்ட ஒமின்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜை என்பதோடு , அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளவராவார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழத்தினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் இருவர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்டு, அந்த மாதிரிகள் கொவிட் பிறழ்வுகளை இனங்காண்பதற்கான ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் நாட்டை விட்டுச் சென்றுள்ளார். நாட்டை விட்டு சென்றுள்ள நபர் தவிர்ந்த மற்றைய தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவரே மூன்றாவது தொற்றாளர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலிருந்து வெளியேறிலுள்ள நபர் தொடர்பாக தகவல்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59