கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருக்கும் பிள்ளைகளை அதிலிருந்து படிப்படியாக விடுவிக்க வேண்டும் - உளவியல் வைத்திய நிபுணர்

17 Dec, 2021 | 03:36 PM
image

கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருக்கும் பிள்ளைகளை அதிலிருந்து படிப்படியாக விடுவிக்க வேண்டும். பிள்ளைகள் இணையதளத்தின் மூலம் எவ்வாறான விடயங்களை மேற்கொள்கிறார்கள் என்பது பற்றி பெற்றோர்கள் தேடிப் பார்ப்பது அவசியமென உளவியல் வைத்திய நிபுணர் மகேஷன் கணேஷன் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காலத்தில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றி ஊடகவியலாளர்களைத் தெளிவூட்டும் செயலமர்வு சி.பி.எம். அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. 

இதில் வளவாளராக பற்கேற்றபோதே உளவியல் வைத்திய நிபுணர் மகேஷன் கணேஷன் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு வருட காலமாக தொடர்வதனால் பிள்ளைகள் உளவில் ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். 

முடக்கநிலை அமுலில் இருந்த காலப்பிரிவில் பாடசாலைகளுக்குச் செல்லாது வீட்டில் இருந்த போது மாணவர்கள் அதிகளவான உளவில் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். 

பாடசாலைகளில் புத்தகக் கல்வியை மாத்திரமல்லாது சமூகத்தில் ஏனையோருடன் எவ்வாறு பழகுவது என்பதையும் மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். 

கொவிட் தொற்று நிலையினால் ஏனையோருடன் இணைந்து செயற்படும் அனுபவம் மாணவர்களுக்குக் குறைவடைந்திருக்கிறது. 

குறித்த காலப் பிரிவில் நண்பர்களுடனான தொடர்பு குறைவடைந்ததனால், தொலைபேசி போன்ற உபகரணங்களுக்கு இசைவாக்கம் அடைந்திருக்கிறார்கள். 

ஆகவே பிள்ளைகள் இணையதளத்தில் எவ்வாறான விடயங்களை மேற்கொள்கிறார்கள் என்பது பற்றி பெற்றோர்கள் தேடிப் பார்க்க வேண்டும். 

இதேவேளை, கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருக்கும் பிள்ளைகளை அதிலிருந்து படிப்படியாக விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18