ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸாரான “இன்டர்போல்” ஊடாக கைதுசெய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கான கோரிக்கையை  கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

உதயங்க வீரதுங்கவை இன்டர்போலினூடாக கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு  குற்றவியல் விசாரணைப் பிரிவு நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

உதயங்க வீரதுங்க நிதிக் குற்றப்புலனாய்வு  பிரிவினரால் சந்தேக நபராக பெயரிடாத நிலையில், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக இதன் போது நீதவான் தெரிவித்துள்ளார்.

2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை  மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.