இலங்கையின் முதலாவது ‘Women Friendly Workplace Awards 2021’ இல் சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாக செலான் வங்கி தெரிவு

Published By: Digital Desk 3

17 Dec, 2021 | 02:34 PM
image

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, இலங்கையின் 'பெண்களுக்கான சிநேகபூர்வமான வேலைத்தளம் விருதுவழங்கள் 2021' (Women Friendly Workplace Awards 2021) இல், சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. Satyn சஞ்சிகை மற்றும் CIMA ஸ்ரீ லங்கா ஆகியன இணைந்து முதன் முறையாக இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. பணியாற்றும் பெண்களுக்கு வங்கி எந்த வகையில் ஆதரவளிப்பதுடன் வலுவூட்டல்களை மேற்கொள்கின்றது என்பதன் அடிப்படையில் வங்கி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் பணியிடங்களில் பெண்களின் பணிகளை வலுப்படுத்துவதாக அமைந்திருப்பதாக WFWP விருதுகள் பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பாலின சமத்துவம் மற்றும் வாய்ப்புகளை இலக்கு வைத்து அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் SDG 05 இல் இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. 

செலான் வங்கியின் மனித வளங்கள் பிரிவின் பிரதான முகாமையாளர் அமந்தி மோதா கருத்துத் தெரிவிக்கையில், “Satyn சஞ்சிகை மற்றும் CIMA ஆகியன சமத்துவத்துக்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வழங்கியிருந்த வாய்ப்புக்காக நாம் நன்றி கூறுகிறோம். சம வாய்ப்புகள் மற்றும் பரந்தளவு பணியாளர்கள் என்பதில் எப்போதும் செலான் வங்கி கவனம் செலுத்துகின்றது. 

செலான் வங்கியைச் சேர்ந்த 46 சதவீதமான ஊழியர்கள் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களில் பலரும் பெண் பணிப்பாளர்களாக அமைந்திருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நிறுவனத்தின் 20 சதவீதமான சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 34 சதவீதமான முகாமைத்துவ அணியினர் பெண்களாக உள்ளனர். 

செலான் வங்கியின் மொத்த ஊழியர்களில் 20 சதவீதமானவர்கள் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பணி புரிவதற்கு பாதுகாப்பான வரவேற்கும் பகுதியாக செலான் வங்கி திகழ்கின்றது. பணி நிலைகளில் முன்னேறுவதற்கு பெண்களுக்கு சம வாய்ப்புகளை செலான் வங்கி வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் வங்கியில் மேலும் அதிகளவு பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு செலான் ஈடுபாட்டுடன் செயலாற்றுகின்றது.” என்றார்.

செலான் வங்கியின் மனித வளங்கள் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர், ஜயந்த அமரசிங்க, மற்றும் கூட்டாண்மைக் கடன் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ஷரொன் பொன்சேகா ‘Women Friendly Workplace Awards 2021’ விருதை பெற்றுக்கொண்டபோது

தொற்றுப் பரவல் காரணமாக செலான் வங்கியின் செயற்பாடுகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பணியிட கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்களை ஊக்குவித்து அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய எந்த நடவடிக்கையையும் பின்தள்ளியிருக்கவில்லை. 

பெண்களுக்கு தமது நிபுணத்துவ இலக்குகளை எய்துவதற்கு வங்கி ஆதரவளித்து ஊக்குவிக்கின்றது. பெண்கள் வலுவூட்டலை வங்கி உறுதி செய்துள்ளதுடன், நுகர்வோர் மற்றும் பங்காளர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. உயர்ந்த நிலை அணிகளுடன் இணைந்து கொள்ளச் செய்வதில் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எதிர்கால தலைமைத்துவ நிலைகளில் பெண்கள் போதியளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதையும் உறுதி செய்கின்றது.

செலான் வங்கியின் கூட்டாண்மைக் கடன் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ஷரொன் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில், “நிறுவனத்தினுள் மனித மூலதன நிரந்தரத் தன்மையை உறுதி செய்வதற்கு ஊழியர் பன்முகத்தன்மை என்பது முக்கியமானதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நாம் பணியிடத்தில் பாலின சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். 

எதிர்காலத்தில் பணியாளர்கள் சமத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், பாலின சமத்துவம் தொடர்பில் விரைவில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை எய்த நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இந்த உறுதி மொழிக்கமைய, எமது பெண் ஊழியர்களின் தக்க வைப்பு வீதத்தை மேம்படுத்த நாம் எதிர்பார்ப்பதுடன், அதனூடாக பொருளாதாரத்துக்கு நிலைபேறாண்மையையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2021 இன் நடுவர்கள் குழாமில், அனுபவம் வாய்ந்த அங்கத்தவர்கள் அடங்கியிருந்தனர். இதில் கூட்டாண்மைத் துறையின் தலைவர்களில் ஒருவராகத் திகழும் ரவி அபேசூரிய FCMA CGMA, CIMA – UK இன் தெற்காசிய ஆணையக அங்கத்தவர் மனோஹரி அபேசேகர, FCMA CGMA, ‘சுவசெரிய’ தவிசாளர், துமிந்திர ரத்நாயக்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித வளங்கள் பிரிவின் தலைமை அதிகாரி – பேராசிரியர். அரோஷா அதிகாரம், வட மாகாண ஆளுநர் – ஜீவன் தியாகராஜா, CIMA இலங்கைக்கான முகாமையாளர் – சஹாரா அன்சாரி FCMA, CGMA, மற்றும் Satyn சஞ்சிகையின் ஸ்தாபகரும் ஆசிரியருமான நயோமினி ஆர் வீரசூரிய ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. 

சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 172 கிளைகள் மற்றும் நாடு முழுவதும் பரந்துள்ள 70 பண வைப்பு இயந்திரங்கள், 86 காசோலை வைப்பு இயந்திரங்கள் மற்றும் 216 ATMகள் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A-(LKA)’ என்பதிலிருந்து ‘A(LKA)’ ஆக தரமுயர்த்தப்பட்டு, செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

ட்ரான்ஸ்பரன்சி குளோபல் நிறுவனத்தால் நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்காக பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், செலான் வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.  இது தற்போது S&P Dow Jones SL 20 சுட்டெண்ணின் அங்கமாகவும் அமைந்துள்ளது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57