ஜப்பான் வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Published By: Vishnu

17 Dec, 2021 | 12:25 PM
image

மத்திய ஒசாகாவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Police officers and firefighters at the scene of a fire in Osaka's Kita Ward on Friday | KYODO


சுமார் 20 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பற்றி எரிந்த பின்னர், காலை 10:45 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.ஒசாகாவின் கிடாஷிஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக ஒசாகா நகராட்சி தீயணைப்பு துறைக்கு உள்ளூர் நேரப்படி காலை 10:20 மணியளவில் தகவல் கிடைத்தது. 

நான்காவது மாடியில் உள்ள மனநல வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. 

60 வயதுடைய நபர் ஒருவர் வைத்திருந்த ஒருவரால் தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து, 17 ஆண்களும், 10 பெண்களும், உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

சுமார் 70 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்பியூலன்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றன் பின் ஒன்றாக கட்டிடத்திலிருந்து வெளியேற்றி அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதேநேரம் அருகில் உள்ள கட்டிடங்களில் மக்களை வெளியேறுமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52