யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜே.அனித்தா , கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.

அனித்தா சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் படைத்திருந்த தேசிய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

இவர் சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில்  3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து சாதனை நிலைநாட்டியிருந்த நிலையில், இன்று ஆரம்பமான 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 3.41 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார்.