மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையான காலப்பகுதியில் கடுமையான காற்று வீசியது. காற்றுடன் பெய்த அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதித்தது.

மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் காற்று காரணமாக மரங்கள் முறிந்தும் அடியுடன் சாய்ந்தும் விழுந்துள்ளன.

நேற்றிரவு முதல் பெய்து வரும் அடைமழையினால் பல வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.