வடக்கு தமிழ் மக்களுக்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் முன்னெடுக்க தாம் தயார் - யாழில் சீனத் தூதுவர்

Published By: Digital Desk 3

16 Dec, 2021 | 05:41 PM
image

(ஆர்.யசி)

வடக்கு தமிழ் மக்களுக்கும் சீனாவுக்குமான நட்புறவை பலப்படுத்திக்கொள்ளவே தாம் விரும்புவதாகவும், வடக்கிற்கான சகல உதவிகளையும் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாக சீனத் தூதுவர் கீ சென் ஹொங் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன பூகோள அரசியலில் சிக்கிக்கொள்ள நாம் விரும்பவில்லை, எனினும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தவும், வடக்கின் அபிவிருத்திக்கும் யார் உதவிகளை செய்ய முன்வந்தாலும் அவர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வோம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சீன தூதுவரிடம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, கடற்றொழில் மற்றும்  நன்னீர் மீன்வளர்ப்பு, கடலட்டை வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இருவருக்கும் இடையிலான  சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

இலங்கை - சீன கூட்டு முயற்சியான குயிலான்  நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 13.75 மில்லியன் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்களையும். 6 மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் உள்ளிட்ட கடல் உபகரணப்பொருட்களையும் சீன தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் வடக்கின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தாம் முழுமையான ஒத்துழைப்புகளை வடக்கிற்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், வடக்கு தமிழ் மக்களுக்கும் சீனாவுக்குமான நீண்டகால உறவுமுறை இருந்ததாகவும், தொடர்ந்தும் அந்த நட்புறவை பேணிப்பாதுகாக்க தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மீனவர்களுக்கான உதவிகளை முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், கடல் அட்டை வளர்ப்பு மூலமாக உள்ளூர் வருவாயை அதிகளில் ஈட்டிக்கொள்ள முடியும் எனவும், ஏனைய மீன்பிடி செயற்பாடுகளை விடவும் இதில் நலன்கள் அதிகம் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சந்திப்பு குறித்து கேசரிக்கு தெரிவிக்க அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறுகையில், 

சீன- தமிழர் உறவை கட்டியெழுப்ப தாம் தயாராக உள்ளதாகவும், நீண்டகால நட்புறவு இரு தரப்பினருக்கும் இடையில் இருப்பதாகவும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். அதேபோல் உதவிகளை வழங்கவும் தாம் தயாராக உள்ளதாக கூறினார்.

எம்மை பொறுத்தவரையில் எமக்கு பூகோள அரசியலில் சிக்கிக்கொள்ள நாம் தயாராக இல்லை, இந்திய சீன அரசியல் நகர்வுகளில் எம்மை இணைத்துக்கொண்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலைப்பாட்டில் நாம் இல்லை, ஆனால் எமக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.

எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அடுத்த கட்ட நவீன செயற்பாடுகளில் எம்மை இணைத்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது. எனவே அதற்காக யார் எமக்கு உதவிகளை வழங்கினாலும் அவற்றை பெற்றுக்கொள்ளும் நிலையில் நாம் உள்ளோம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.

அதேபோல்  மக்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுத்தரக்கூடிய முதலீடுகளையும் தொழில் நுட்பங்களையும் வரவேற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீன முதலீட்டு முயற்சிகளை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளேன். 

கடலட்டை பண்ணை முதலீட்டின் ஊடாக ஐந்து மடங்கு இலாபத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முதலீட்டின் மூலம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ள முடியும் என்றால் அது நல்ல விடயம் என்பதையும் எடுத்துக்கூறியுள்ளேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55