தடுப்பூசியை கட்டாயமாக்கியதை எதிர்த்து வழக்குப்பதிவு: சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பில் நீதிமன்றுக்கு தெரிவித்தது என்ன?

Published By: Vishnu

16 Dec, 2021 | 07:33 AM
image

நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க, கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவது கட்டாயம் என்று சுகாதார அமைச்சகம் எந்த சட்டத்தையும் அல்லது விதிமுறைகளையும் வெளியிடவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பில் உயர் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

18 வயதிற்குட்பட்டவர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெறுவதைக் கட்டாயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சட்டப் பிரதிநிதி இந்த தகவலை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சட்டப் பிரதிநிதி, தடுப்பூசியைப் பெற விரும்பும் எந்தவொரு நபரும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இது தொடர்பாக கட்டாய விதிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறினார்.

கலாநிதி தாரிணி ராஜசிங்கம் உட்பட மூவரினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொவிட் தடுப்பூசியைப் பெறுவதை கட்டாயமாக்கும் முடிவு சட்டத்திற்கு எதிரானது என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக சட்டப் பிரதிநிதியின் சாட்சியத்தை பதிவு செய்த பின்னர், வழக்கு 2022 ஜனவரி 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58