காதலன் செய்த வேலையால் பொது இடத்தில் மயங்கி விழுந்த காதலி

Published By: Raam

30 Sep, 2016 | 09:36 AM
image

மெக்சிகோவில் காதலன் தன் காதலிக்கு வியப்பளிப்பதற்காக செய்த செயலினால் காதலி மயக்கமடைந்து கிழே விழுந்த காணொளி பதிவு  சமூகவலைத்தளங்களில் மிகவேகமாக பரவி வருகின்றது.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெனிடெஸ் என்பவர் மெக்சிகோ மொடல் அழகியான ரெனா ரென்டேரியாவிடம் தன்னுடைய காதலை கூறுவதற்காக  இசைக்கருவி வாசிப்பவர்கள், காதல் கூறுவதை புகைப்படம் எடுப்பதற்கு புகைப்படக் கலைஞர்கள், வீடியோ எடுப்பதற்கு என ஒரு திருமண அரங்கு போல் அவர் காதல் கூற நினைத்து வைத்த இடத்தை வடிமைத்துள்ளார்.

பெனிடெஸை காண்பதற்கு ரெனா ரென்டேரியா வந்த போது இசைக்கலைஞர்கள் அனைவரும் இசை வாசித்துள்ளனர். இதனால் ஆச்சரியமடைந்த ரென்டேரியா அவர் பெனிடெஸிற்கு அருகில் சென்றுள்ளார்.

அப்போது திடீரென அவர் ரெனா ரென்டேரியாவிடம் ஒரு மோதிரம் அடிங்கிய சிறிய கருப்பு பெட்டியினை வழங்கிய பெனிடெஸ் நான் உன்னை காதலிக்கிறேன், நீ என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரெனா ரென்டேரியா ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்றமையாலும் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல், அந்த இடத்திலே மயங்கி விழுந்தார். அதன் பின் அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள வைத்தியசாலையிற்கு சிகிச்சையிற்காக அழைத்து சென்றுள்ளனர்.

தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அது தொடர்பாக மோதிரம் மாற்றியதை ரெனா ரென்டேரியா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பரிசளிக்கும் போது ரெனா ரென்டேரியா மயக்கமடைந்ததை வீடியோ எடுத்துள்ளதால், அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் மிகவிரைவாக பரவி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47