புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் - ஐ. நா. அபிவிருத்தி திட்ட குழுவிடம் நீதி அமைச்சர் உறுதி

Published By: Digital Desk 4

15 Dec, 2021 | 09:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில்  புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் புதிய நீதிமன்றங்களை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட  உதவி செயலாளர் கனி விக்னராஜா மற்றும் தூதுக் குழுவினர் நீதி அமைச்சர் அலி சப்ரியை நீதி அமைச்சில் புதன்கிழமை (15) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இதன்போது நீதித் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்கள் முன்னெடுப்புகள் குறித்து  நீதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் புதிய நீதிமன்றங்களை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட பிரதிநிதிகள்  இதன் போது  அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் சார்பில் நிரந்தர பிரதிநிதி ரொபட் ஜூகம், பிரதி  நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மலின் ஹார்விங், கொள்கை நிபுணர் சந்திரிகா கருணாரத்ன, ,அமைச்சின் செயலாளர் மாயாதுன்ன இணைப்புச் செயலாளர் ஸமீர் ஸவாஹிர், ஆலோசகர் பயாத் பாக்கிர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததாக நீதி அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50