அணிக்கு 7 பேர் பங்கேற்கும் 'ரக்பி செவன்ஸ்' வெள்ளியன்று ஆரம்பம் 

Published By: Digital Desk 4

15 Dec, 2021 | 05:37 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஏறக்கு‍றைய  600 நாட்களுக்குப் பின்னர்  பாடசாலை அணிகளுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர் பங்கேற்கும் 'ரக்பி செவன்ஸ்'  போட்டித் தொடரை எதிர்வரும் 17 ஆம் திகதியன்று ஆரம்பிப்பதற்கு இலங்கை பாடசாலை ரக்பி சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக நடைபெறாமல் இருந்து வந்த பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 600  நாட்களுக்குப் பின்னர், 50  பாடசாலை ரக்பி அணிகள் பங்கேற்கும் பாடசாலை ரக்பி செவன்ஸ் போட்டியானது 5 மாகாணங்களுக்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.

இதில் மேல் மாகாண பாடசாலை  அணிகள் பங்கேற்கும் போட்டிகள் ரக்பி செவன்ஸில் பாடசாலை அணிகளின்  தரவரிசைகளுக்கு ஏற்ப  ஏ மற்றும் பீ என பிரிக்கப்பட்டுள்ளது. 

மேல் மாகாணத்தின் பீ பிரிவுக்கான போட்டிகள்  எதிர்வரும் 18 ஆம் திகதியன்றும், ஏ பிரிவுக்கான போட்டிகள் 19 ஆம் திகதியன்றும் கொழும்பு ரோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதியில் நடைபெறவுள்ளன.

மேலும் மத்திய மாகாண பாடசாலை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதியன் கண்டி, திரித்துவக் கல்லூரி மைதானத்திலும்,  வட மேல் மாகாண  பாடசாலை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று குருணாகல் மலியதேவ கல்லூரி மைதானத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ருவன் வெல்ல பொது மைதானத்தில் நடத்தப்படவுள்ள சப்ரமுவ மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியன்றும், காலி சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடத்தப்படவுள்ள தென் மாகாண பாடசாலை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் எதிர்வரும் 31 ஆம் திகதியன்றும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போட்டித் தொடரில் மஹாநாம கல்லூரி,கன்னங்கரா கல்லூரி, பிரியரத்ன கல்லூரி, பாணந்துறை சுமங்கல கல்லூரி,  பிலியந்தலை மத்திய கல்லூரி, நாலந்தா கல்லூரி, சென்.பெனடிக்ட் கல்லூரி, சென்.ஜோன் கல்லூரி, கேரி கல்லூரி, மொறட்டு கல்லூரி ஆகியன மேல் மாகாண பீ பிரிவில் பங்கேற்கின்றன.

மேல் மாகாண ஏ பிரிவில், ரோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி,வெஸ்லி கல்லூரி,தேர்ஸ்டன் கல்லூரி, சென்.ஜோசப் கல்லூரி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, சென்.பீற்றர்ஸ் கல்லூரி, மொறட்டுவை பிரின்ஸ் ஒப்‍ வேல்ஸ் கல்லூரி, மருதானை சாஹிரா கல்லூரி, கல்கிஸ்சை சென் தோமஸ் கல்லூரி, இசிப்பத்தன கல்லூரி, விஞ்ஞானக் கல்லூரி  ஆகியன இடம்பெறுகின்றன.

மத்திய மாகாணத்தில் கிங்ஸ்வூட் கல்லூரி, திரித்துவக் கல்லூரி, சென்.சில்வெஸ்டர்ஸ் கல்லூரி, தர்மராஜா கல்லூரி, சென்.அன்தனீஸ் கல்லூரி,வித்தியார்த்த கல்லூரி,வாரியபொல ஸ்ரீ சுமங்கல கல்லூரி, ஸ்ரீ ராஹுல கல்லூரி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

மேலும், தென் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தலா  7 பாடசாலை அணிகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 5 பாடசாலை அணிகளும் தத்தம் மாகாணங்கள் ரீதியாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35