அரசியல்கைதிகளை விடுதலை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் உலகநாடுகளிடம் வலியுறுத்தல்

Published By: Digital Desk 4

15 Dec, 2021 | 02:22 PM
image

(நா.தனுஜா)

அரசியல்கைதிகள் என்ற ரீதியில் கைதுசெய்து தடுத்துவைக்கப்படுபவர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களது இனம், மதம், மொழி, அவர்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பன உள்ளடங்கலாக அவர்களது அடையாளத்திற்காக இலக்குவைக்கப்படுவதுடன் அரசியல்கைதிகளில் சிறுபான்மையினர் பெருமளவிற்கு உள்ளடங்குகின்றார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென், சிறைப்படுத்தப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கு அனைத்து உலகநாடுகளும் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Articles Tagged Under: ஆண்டனி ஜே. பிளிங்கன் | Virakesari.lk

அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல்கைதிகள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்ட இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென், சிறைப்படுத்தப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கு உலகநாடுகள் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்  தெரிவிக்கையில்,

அரசியல்கைதிகள் சில சந்தர்ப்பங்களில் அவர்களது இனம், மதம், மொழி, அவர்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பன உள்ளடங்கலாக அவர்களது அடையாளத்திற்காக இலக்குவைக்கப்படுகின்றார்கள். குறிப்பாக அரசியல்கைதிகளில் சிறுபான்மையினர் பெருமளவிற்கு உள்ளடங்குகின்றார்கள். சிறைவைக்கப்படும் கைதிகள் சித்திரவதைகளுக்கும் மனிதாபிமானமற்ற முறையிலான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்படும் அதேவேளை, அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளும் மறுக்கப்படுகின்றன' என்று தனது உரையில் தெரிவித்த இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென், 

மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின் பிரகாரம் சுமார் 65 இற்கும் அதிகமான நாடுகள் அரசியல்கைதிகளை சிறைப்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 'இவர்களில் பெருமளவானோர் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் முன்னிறுத்திய அவர்களது நாடுகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்கான சிறந்த நம்பிக்கை வித்துக்களாவர். அரசியல்கைதிகளை சிறைப்படுத்துவதானது ஜனநாயகம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் சீர்குலைக்கின்றது. 

எனவேதான் அரசியல்கைதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தாலும் உலகநாடுகள் அனைத்தும் அதற்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிடவேண்டியதும் அவர்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து செயலாற்றுவதும் மிகவும் அவசியமாகும்' என்றும் பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார்.

'ஆகவே அரசியல்கைதிகளை விடுதலைசெய்யுமாறு அனைத்து நாடுகளிடமும் கோருகின்றோம். எமக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் காணப்படக்கூடிய உறவிற்கு அப்பால், அரசியல்கைதிகளை விடுவிக்க அந்நாடுகள் முன்வரவேண்டும். என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11