பி.பீ. ஜயசுந்தரவின் ஆலோசனைகளே நெருக்கடிக்கு காரணம் - சுதந்திர கட்சி கடும் சாடல்

Published By: Vishnu

15 Dec, 2021 | 01:26 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர பொறுப்பு கூற வேண்டும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அவரின் ஆலோசனைகளே நெருக்கடிக்கு காரணம் என்றார்.

May be an image of 1 person, sitting, standing and indoor

அத்துடன் உரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நெல் விவசாயம் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகள் அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை விட பாரதூரமான பிரச்சினையாக 6.7 மில்லியன் டொலர் நஷ்ட ஈட்டு தொகையை சீனாவிற்கு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. இந்த தொகையை தவறிழைத்தவர்கள் தனிப்பட்ட ரீதியில் செலுத்த வேண்டும். மாறாக அரசாங்கம் இதனை செலுத்த வேண்டிய தேவை கிடையாது.

சமையல் எரிவாயு சிலிண்டர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கும் உரிய தரப்பினர் பொறுப்புகூற வேண்டும். தர நிர்ணயசபையும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் பாரிய பொறுப்பு அமைச்சர்களுக்கு காணப்படுகிறது. எனவே அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து அமைச்சர்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும். மாறாக அமைச்சர்கள் வீதி சமிஞ்ஞைகளைப் போன்று செயற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55