தரமற்ற எரிவாயுவினை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் - லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தரவு

Published By: Vishnu

15 Dec, 2021 | 12:32 PM
image

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எரிவாயு  கப்பலிலுள்ள தரமற்ற எரிவாயுவினை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகள், தரநிர்ணய நிறுவனத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள தரத்திற்கு இணங்காதமையினை சுட்டிக்காட்டியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு தேசிய மட்டத்திலான தர நிர்ணயத்தை கொண்டிருக்காத காரணத்தினால் எரிவாயு தொகையை மீண்டும் திருப்பியனுப்ப நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தீர்மானித்தது.

எரிவாயு கசிவு உணர் திறனை தூண்டும் எதில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் எரிவாயுவில் 15 சதவீத அளவில் காணப்பட வேண்டும்.

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,700 மெற்றிக்தொன் எரிவாயுவில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 15 சதவீத அளவிற்கு குறைவான மட்டத்தில் காணப்பட்டமை பரிசோதனை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவற்றை திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் (SLSI) குறிப்பிடப்பட்டுள்ள சமையல் எரிவாயு தரத்தினை உறுதிப்படுத்தி விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாக, லிட்ரோ கேஸ் நிறுவனம், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் இது தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நிறுவனம் இதனை நீதிமன்றுக்கு அறிவித்தது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44