பிரதமர் மஹிந்த அம்பாந்தோட்டை முறைமுகத்திற்கு விஜயம்

Published By: Digital Desk 4

14 Dec, 2021 | 10:04 PM
image

(செய்திப்பிரிவு)

அம்பாந்தோட்டை முறைமுகம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும், எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்தும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

'மாகம் ருஹூணுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக' வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான அம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. 

ஒரு ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட இக்களஞ்சிய வளாகத்தின் நிர்மாணப் பணிகளை குறிக்கும் வகையில் பிரதமரினால் நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டது. இதன் போதே இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஷென்ஹொங் உள்ளிட்ட குழுவினருடன் துறைமுக வளாகத்தில் காண்காணிப்பு விஜயம்மொன்றை மேற்கொண்டார்.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தில் உள்ள பல் கல சரக்கு பரிமாற்றல் நடவடிக்கை பிரிவிற்கு விஜயம் செய்த பிரதமர் அங்கு நடைபெறும் வாகன மீளேற்றல் செயற்பாட்டை கண்காணித்தார்.

இவ்வருடத்தில் மாத்திரம் சுமார் ஐந்து இலட்சம் வாகனங்கள் அப்பிரிவினால் கையாளப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் சென்னை, முந்த்ரா, எனோர், தென்கொரியாவின் குன்சான், பியொங்டெக் மற்றும் ஜப்பானின் ஒசாகா, கொபே மற்றும் நகோயா ஆகிய துறைமுகங்களிலிருந்து பரிமாற்றல் நடவடிக்கைக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டதுடன், தென்னாபிரிக்காவின் டர்பன், மெக்சிகோவின் வெரக்ரஸ், அமெரிகாவின் சென் அன்டோனியோ, நெதர்லாந்தின் ரொடர்டேம் மற்றும் பிரான்சின் லே ஹெவரே ஆகிய துறைமுகங்களுக்கு இவ்வாகனங்கள் மீளேற்றப்பட்டன.

துறைமுக வளாகத்தில் உள்ள கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்படும் ஷென்  ஷென் ஷின்ஜி குழுமத்திற்கு சொந்தமான 'பிரினிமி' 'மண்டலத்தினுள் மண்டலம்' எனும் எண்ணக்கருவில் செயற்படுத்தப்படும் மின்னணு சாதன உற்பத்தி வலயம் மற்றும் சிலோன் டயர் உற்பத்தி தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் டயர் உற்பத்தி தொழிற்சாலை வளாகம் பிரதமரின் விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட்டது.

டயர் உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைக்கான மூலப்பொருட்களும், மனித வளமும் உள்நாட்டிலிருந்தே பெறப்படுகின்றன. 55.8 ஹெக்டயர் பரப்பளவிலான டயர் உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் முதலீடு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அம்பாந்தோட்டை முறைமுகம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும், எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூவினால் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினால் லுணுகம்வெஹெர கிராமத்தினை 'எதிர்பார்ப்பின் கிராமமாக' அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் அரச பத்திரம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ ஆகியோரிடையே பரிமாற்றிக் கொள்ளும் செயற்பாடும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38