எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் நிகழ்ந்த மரணம் படுகொலையாகும் - ஹெக்டர் அப்புஹாமி 

Published By: Digital Desk 4

14 Dec, 2021 | 09:52 PM
image

(நா.தனுஜா)

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையில், அதன் விளைவாகப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அது உயிரிழப்பு அல்ல, மாறாக வெடிக்கக்கூடிய எரிவாயு சிலிண்டர் அவரது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டமையினால் நிகழ்ந்த படுகொலையாகும். 

ரிஷாட் பதியுதீனின் கட்சியைச்சேர்ந்த மூவரையும் நீக்க முடியுமா ? -  அரசாங்கத்திற்கு சவால் விடும் ஹெக்டர் அப்புஹாமி | Virakesari.lk

உயிர்த்த ஞாயிறுதினக்குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து தற்போது எரிவாயு சிலிண்டர் குண்டுகளும் திரவ உர கொள்கலன் குண்டுகளும் மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளன. 

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் குறைந்தபட்சம் தமது வீடுகளுக்குள்கூட நிம்மதியாக இருக்கமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் செவ்வாய்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களின் தலைவர்களான பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கடந்த காலங்களில் பக்கச்சார்பற்ற முறையிலும் மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையிலும் செயற்பட்டனர். 

எமக்குக் கிடைத்த தகவல்களின்படி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து முதலீட்டுச்சபையின் உயரதிகாரிகள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்த போதிலும் ஆரம்பத்தில் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே இவ்வாறான சம்பவங்களுக்கும் பாராளுமன்றக்கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டமைக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தத் தெரிவுக்குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் சுயாதீன விசாரணைகளை நிறுத்துவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்காகவே நிறைவேற்றதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நாட்டில் இடம்பெறும் ஊழல்மோசடிகளை மூடிமறைப்பதற்காகவே அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புத்திஜீவிகள் மூலம் நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்துச்செல்லப்போவதாகக்கூறிய அரசாங்கம் இப்போது பாராளுமன்றத்தெரிவுக்குழுக்களில் அங்கம்வகிக்கின்ற புத்திஜீவிகளை விரட்டியடிக்க முயற்சிக்கின்றது.

அதேபோன்று எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் எரிவாயு சேர்மானத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநியமத்தை மாற்றியமைப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம்வகிப்போரால் உத்தரவிடப்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன முன்னணியில் அங்கம்வகிக்கும் ஏனைய 11 சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தின் ஊடாக ராஜபக்ஷக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் விதமாக மாத்திரமே செயற்பட்டுவந்திருக்கின்றன. 

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், துறைமுகநகர ஆணைக்குழுச்சட்டம் உள்ளிட்ட அனைத்தும் ராஜபக்ஷ குடும்பத்தின் நலனை உறுதிசெய்யும் நோக்கிலேயே நிறைவேற்றப்பட்டன.

மாறாக நாட்டுமக்களின் நலனை உறுதிசெய்வதற்கோ அல்லது அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கோ எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கு பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கக்கூடிய 11 சிறிய கட்சிகளும் பொறுப்புக்கூறவேண்டியது அவசியமாகும். ராஜபக்ஷ குடும்பம் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பாராளுமன்றத்தையும் பயன்படுத்திக்கொள்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அடுத்ததாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையில், அதன் விளைவாகப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அது உயிரிழப்பு அல்ல, மாறாக படுகொலையாகும். உயிர்த்த ஞாயிறுதினக்குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து தற்போது எரிவாயு சிலிண்டர் குண்டுகளும் திரவ உர கொள்கலன் குண்டுகளும் மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளன. அரசாங்கத்தின் செயற்பாடுகளால் குறைந்தபட்சம் தமது வீடுகளுக்குள்கூட நிம்மதியாக இருக்கமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டப்பட்டுள்ளனர்.

மேலும் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்கு அரசாங்கம் உடன்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுவாக சீனா ஏனைய சிறிய நாடுகளுக்கு நிதியுதவிகளையும் பெருந்தொகையான கடனையும் வழங்கி, அவற்றைத் தமது காலனித்துவத்தின்கீழ் கொண்டுவருவதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றன.

அதன்மூலம் தமக்கு அருகிலுள்ள அனைத்து நாடுகளையும் தமது உடமையாக்கி, உலகில் மிகப்பலம்வாய்ந்த நாடாக எழுச்சியடைவதே சீனாவின் எதிர்பார்ப்பாகும். அதன் ஓரங்கமாகவே இந்த விவகாரத்தையும் நோக்கவேண்டியிருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32