அமைச்சர் டக்ளஸை சந்தித்து அமெரிக்க இராஜதந்திரிகள் பேச்சு

Published By: Digital Desk 2

14 Dec, 2021 | 09:46 PM
image

செய்திப்பிரிவு

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (13) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்த அமெரிக்க  பதில் தூதுவர்,  தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்ற கருத்தினை முன்வைத்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  தமிழ் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத நியாயமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்ற தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான சமிக்கைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவதாகவும், ஆனால் ஏனைய சில தரப்புக்கள் சுயலாபங்களுக்காக மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய தோற்றுப்போன வழிமுறைகளையே தொடர்ந்தும் பேசுவதாக தெரிவித்தார்.

அத்துடன் கடந்த காலங்களில் தன்னால் வெளிப்படுத்தப்பட்ட எதிர்வுகூறல்கள் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், காணாமல் போனோர் விவகாரத்திற்குப் பரிகாரம் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அணுகுமுறைகள் தொடர்பாகவும் புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ  ஆர்வம் வெளியிட்டுள்ள நிலையில், அதுதொடர்பில் தன்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும்  அமெரிக்கத் தரப்பிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று, கடற்றொழில் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற சவால்கள் தொர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அமெரிக்காவின்  உதவித் திட்டங்கள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமெரிக்காவின் இலங்கைக்கான பதில் தூதுவருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40