வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் தெற்கின் இனவாதத்தை மேலும் பலபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.  அதேபோல் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உருப்பினரும் அமைச்சருமான நிலம் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். 

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கவும் முதலமைச்சர்களின் அதிகாரங்கள் ஒரு எல்லைக்கும் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் நல்ல உதாரணமாகும். ஆகவே உடனடியாக அவர்களின் அதிகாரங்களை வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.