ஆப்கானில் 10 பேரை காவு கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா பெறுப்பேற்காது - பென்டகன்

Published By: Vishnu

14 Dec, 2021 | 08:51 AM
image

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் 10 பேரை காவு கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கு எந்த அமெரிக்க வீரர்களும் அல்லது அதிகாரிகளும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று பென்டகன் கூறியுள்ளது.

Relatives and neighbors of the Ahmadi family gathered around the incinerated husk of a vehicle targeted and hit by an U.S. drone strike that was supposed to target ISIS-K suicide bombers but instead killed 10 civilians including 7 children, in Kabul, Afghanistan, Monday, Aug. 30, 2021

தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி காபூலை விட்டு வெளியேறிய இறுதி நாட்களில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ட்ரோன் தாக்குதலில் ஒரு உதவி பணியாளர் மற்றும் ஏழு குழந்தைகள் / சிறுவர்கள் உட்பட அவரது குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் இறந்தனர்.

உதவிப் பணியாளரின் வாகனம் இஸ்லாமிய அரசின் உள்ளூர் கிளையான IS-K உடன் தொடர்பு கொண்டதாக அமெரிக்க உளவுத்துறை நம்பியது.

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்களை பலியெடுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்தது.

ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கன்சி ஆகஸ்ட் 29 அன்று நடந்த தாக்குதல் ஒரு "துக்ககரமான தவறு" என்று விபரித்தார்.

இது தொடர்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட உயர்மட்ட உள்ளக மதிப்பாய்வில், எந்த சட்டமும் மீறப்படவில்லை, மேலும் தவறான நடத்தை அல்லது அலட்சியத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால், ஒழுங்கு நடவடிக்கை தேவையில்லை என்று அமெரிக்கா கூறியது.

இந் நிலையில் திங்களன்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மேற்படி மதிப்பாய்வுக்கு ஒப்புதல் அளித்ததாக பல அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50