பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தேவி. இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியிருக்கிறார். அந்த நடனத்தை திரையில் காணும் ரசிகர்கள், தமன்னாவை பிரபுதேவி என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார்கள். அந்த அளவிற்கு தேவிபடத்தில் நடனமாடியிருக்கிறார். 

இது குறித்து தமன்னா பேசும் போது, ‘படத்தில் அந்த பாடல் இடம்பெற்றுள்ளது குறித்து இயக்குநர் விஜய் விளக்கிய பிறகு அதற்கான ஒத்திகைக்கு வருமாறு நடன இயக்குநராகவும் இருக்கும் பிரபுதேவா அழைப்பு விடுத்தார். இரண்டுநாள் பயிற்சிக்கு சென்றேன். அதன் பிறகு உடலில் வலி என்று சொன்னேன். பின்னர் எனக்காக காத்திருந்தார்கள். பின்னர் 15 நாள் பயிற்சி எடுத்த பின்னர் இக்காட்சியை படமாக்கினார்கள். ஆனால் இரண்டே நாட்களில் இப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. அது ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் அதனை திரையில் தற்போது பார்க்கும் போது மாஸ்டர் மீதும், இயக்குநர் விஜய் மீதும், பிரபுதேவா மீதும் மரியாதை வருகிறது. இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் விஜய் சார் சொல்ல ஆரம்பித்த 15 வது நிமிடம், நான் தேவியாக மாறி விட்டேன்... அந்த அளவிற்கு இந்த படத்தின் கதைக்களம் வலுவானதாக இருந்தது. ஒரு அற்புதமான படைப்பாளி விஜய் என்பதை தாண்டி அவரை ஒரு உன்னதமான மனிதராகவும் நான் பார்க்கிறேன்’ என்று உணர்ச்சி மேலிட பேசினார் தமன்னா.

இப்படத்தில் கிராமத்து பெண்ணாக மஞ்சள் பூசி தமன்னாவின் தோற்றம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்கிறார்கள் படக்குழுவினர்.

தகவல் : சென்னை அலுவலகம்