வத்தளையில் கடலில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

13 Dec, 2021 | 05:00 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ப்ரீத்திபுர கடலில் நீராடச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள், கடலையால் அடித்துச் செல்லப்பட்டு  காணாமல்போன  நிலையில் இன்று  (13) காலை கடற்படையினரால் சடலமாக  மீட்கப்பட்டுள்ளனர்.

வத்தளை - எந்தேரமுல்ல பகுதியைச் சேர்ந்த, மஹர பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும்  கே.கே. ருவிந்த புன்சர (15) மற்றும் எம். சஞ்சித சந்தகெலும் (15) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில்   சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.

வத்தளை ப்ரீத்திபுர கடற்கரைக்கு நேற்று முன் தினம் ஞாயிரு (12) மாலை பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் சென்றுள்ளனர். அவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், அவர்களில் இருவர் கடலலையினால் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து அவர்கள் காணாமல்போயுள்ளனர்.

காணாமல்போன மாணவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்த நிலையில் இரு மாணவர்களும் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.  நீராட பொருத்த மற்ற பகுதியில் நவர்கள் நிராடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08