2021 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து

Published By: Vishnu

13 Dec, 2021 | 10:31 AM
image

நடிகையும் மொடல் அழகியுமான ஹர்னாஸ் சந்து 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்றதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இஸ்ரேலின் ஈலாட்டில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி 70 ஆவது பதிப்பில் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டம் வென்றவரான மெக்சிகோவை சேர்ந்த மிஸ் யுனிவெர்ஸ் ஆண்ரியா மேசா, ஹர்னாஸ் சந்துவுக்கு மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்துக்கான கிரீடத்தைச் சூட்டினார்.

பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான மொடல் அழகி பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்றுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

இதற்கு முன் 2000 ஆவது ஆண்டில் லாரா தத்தா வென்றிருந்தார். அதற்கு முன் சுஸ்மிதா சென் இந்தப் பட்டத்தை 1994 இல் வென்றிருந்தார்.

சந்து உட்பட இதுவரை மூன்று இந்தியர்கள் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right