சுபீட்சத்திற்காக வாக்களித்த மக்கள் நாளைய தினம் குறித்து நிச்சயமற்ற நிலையிலுள்ளனர் - ருவன் விஜேவர்தன

Published By: Gayathri

12 Dec, 2021 | 08:00 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் 1.5 பில்லியன் டொலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. இதில் மருந்து மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கான நிதியை ஒதுக்கினால் இம்மாத இறுதியில் 1100 மில்லியன் மாத்திரமே எஞ்சும். 

அடுத்த ஆண்டு இறக்குமதித் தேவையுடன் ஒப்பிடும்போது, அடுத்த ஆண்டில் முதல் இரு வாரங்களுக்குக் கூட இந்த தொகை போதுமானதாக இருக்காது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

சுபீட்சத்தை இலக்காகக் கொண்டு தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கிய மக்கள் இப்போது நாளைய தினம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். 

எதிர்வரும் இரு மாதங்களுக்குள் 5 பில்லியன் டொலரேனும் கிடைக்கப் பெறாவிட்டால் நாட்டை கொண்டு செல்வது மிகக்கடினமாகும் என்றும் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் ஞாயிற்றுக்கிழமை (12) கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எப்படி வாழ்வது என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றியுள்ளது. அரசாங்கத்தை நியமித்த 69 இலட்சம் மக்கள் மாத்திரமின்றி, வாக்களிக்காத மக்களும் இந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் திட்டமிடல் அற்ற வேலைத்திட்டங்களின் காரணமாகவே மக்கள் இவ்வாறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 

அரசாங்கத்திடம் பொருளாதார முகாமைத்துவம் குறித்த எவ்வித அறிவும் இல்லை. சகல விடயங்களுக்கும் கொவிட் தொற்றை காரணமாகக் கூறி அதன் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகவும் கூறுகின்றனர். 

எவ்வாறிருப்பினும் இலங்கையை விட கொவிட் தொற்றால் பாரியளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் கூட பொருளாதாரத்தை சீராக முகாமைத்துவம் செய்துள்ளன.

அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் டொலர் இன்மையே ஆகும். தற்போது நாட்டில் 1.5 பில்லியன் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. இதில் மருந்து மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கான நிதியை ஒதுக்கினால் இம்மாத இறுதியில் 1100 மில்லியன் மாத்திரமே எஞ்சும். 

அடுத்த ஆண்டு இறக்குமதித் தேவையுடன் ஒப்பிடும்போது, இரண்டு வாரங்களுக்குக் கூட இந்த தொகை போதுமானதாக இருக்காது.

வரலாற்றில் அந்நிய செலாவணி இருப்பு இவ்வாறு வீழ்ச்சியடைந்தமை இதுவே முதன் முறையாகும். எதிர்வரும் இரு மாதங்களுக்குள் 5 பில்லியன் டொலரேனும் கிடைக்கப் பெறாவிட்டால் நாட்டை கொண்டுச் செல்வது மிகக்கடினமாகும். 

இது நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் நேரடியாகப் பாதிக்கும். இதன் பிரதிபலன் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. தற்போது மீண்டும் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இரசாயன உரத்திற்கு தடை விதித்த அரசாங்கம் தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது. எனினும் இறக்குமதி நிறுவனங்கள் உரத்தை இறக்குமதி செய்யவில்லை. அதற்கான காரணம் டொலர் தட்டுப்பாடு மற்றும் உலக சந்தையில் இரசாயன உரத்தின் விலை உயர்வடைந்துள்ளமையாகும்.

இயற்கை உரம் என்ற கருத்தாக்கத்தால், விவசாய பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளது. அதனால் மரக்கறிகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.

உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை உயர்வடைந்துள்ளமையால் அதனை உபயோகித்து நெல் பயிரிடப்பட்டால் அரிசியின் விலை 500 ரூபா வரை அதிகரிக்கும் என்று கடந்த வாரம் விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டில் 25 கிலோ கிராம் யூரியா உரம் 9,000 - 12,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த பெரும்போகத்தின் பின்னர் அரிசியின் விலை பாரியளவில் அதிகரிக்கக் கூடிய அபாயமுள்ளது. 

அனைத்து மரக்கறிகளினதும் கிலோ ஒன்றுக்கான விலை 600 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. இதே போன்று கருவாடு உள்ளிட்ட மீன் உணவு பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. 

மக்களால் எவ்வாறு வாழ முடியும்? அமைச்சர்கள் இவற்றை கவனத்தில் கொள்வதில்லை. காரணம் அவர்களுக்கு தேவையான உணவு, நீர் என்பன தடையின்றி கிடைக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் மக்கள் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய சூழல் காணப்பட்டது. பணம் காணப்பட்டது. எமது ஆட்சியில் மூன்று வேளையும் உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மக்கள் அந்த வாழ்க்கையை விடவும் சுபீட்மான வாழ்க்கையை எதிர்பார்த்து இன்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 

நாம் ராஜபக்ஷக்களின் கடனை செலுத்தி, மக்களுக்கு வருமானம் வரக்கூடிய சூழலை ஏற்படுத்தினோம்.

எனவே தற்போதைய அரசாங்கம் செலுத்திக் கொண்டிருப்பது நாம் பெற்ற கடனை அல்ல. அதுவும் ராஜபக்ஷ அரசாங்கம் பெற்ற கடனே ஆகும். 

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு ஐ.தே.க தலைவர் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திய போதிலும், அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டமைக்கான காரணம் என்ன? சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறும் கடனில் மோசடி செய்ய முடியாது.

மக்கள் நாட்டை கைவிட்டுச் செல்லும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. நாட்டை விட்டுச் செல்ல முடியாதவர்கள் உண்ண உணவின்றி சிரமத்துடன் வாழ்கின்றனர். 

ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பது வரலாற்று செயற்பாடுகள் ஊடாக தெளிவாகிறது. 

ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொருளாதாரம் மேம்பட்டது. எனினும் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது.

சர்வதேச தொடர்புகள் கொண்ட ஒருரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் மாத்திரமே நாட்டில் தற்போதுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அந்த இயலுமை உள்ள ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. வேறு எவருக்கும் அந்த வாய்ப்பு இல்லை. 

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆட்சியை கையளித்தால் நாடு அபிவிருத்தியடையும். இந்த நிலைப்பாட்டை நாம் கிராமமட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04