சந்திமாலின் போராட்டம் வீணானது ; ஒரு ஓட்டத்தால் வென்றது தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ்

Published By: Vishnu

12 Dec, 2021 | 08:17 AM
image

லங்கா பிரீமியர் லீக் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணி, கொழும்பு ஸ்டார்ஸ் அணியை ஒரு ஓட்டத்தினால் தோற்கடித்துள்ளது.

Image

2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் ஆரம்ப சுற்றில் இதுவரை விளையாடிய போட்டிகளிலேயே மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த போட்டியாக இந்த ஆட்டம் மாறியது. 

தினேஷ் சந்திமாலின் அபாரமான துடுப்பாட்டத்தால் கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றியின் இறுதி விளிம்பு வரை சென்றது. எனினும் அவர்களின் வெற்றிக் கனவினை மாற்றியமைத்தது சமிக கருணாரத்னவின் இறுதி ஓவர்.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணித் தலைவர் தசுன் ஷனக முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார். 

நிரோஷன் டிக்வெல்லா மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 48 ஓட்டங்களை குவித்து இன்னிங்ஸை தொடங்கினர்.

பின்னர் டிக்வெல்ல 30 ஒட்டங்களுடனும், பில் சால்ட் 21 ஓட்டங்களுடனும் சீக்குகே பிரசன்னவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, முதல் பவர் பிளேயில் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் 6 ஓவர்கள் முடிவில் 53 ஓட்டங்களை எடுத்தது.

இவர்களுக்கு அடுத்தபடியாக வந்த சோஹைப் மக்சூத் மாத்திரம் அதிகபடியாக 24 ஓட்டங்களை பெற, அடுத்தடுத்து வந்த ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணி.

பந்து வீச்சில் கொழும்பு ஸ்டார்ஸ் சார்பில் ரவி ராம்பால், ஜெப்ரி வெண்டரிசி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சீகுகே பிரசன்ன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

139 என்ற இலக்கை துரத்திய கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. அதனால் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது அந்த அணி.

ஆரம்ப வீரர்களான குசல் பெரேரா 5 ஓட்டங்களுடனும், டோம் பென்டன் 8 ஓட்டங்களும் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த அஷான் பிரியஞ்சன் 3 ஓட்டங்களுடனும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் தனஞ்சய டிசில்வாவும், தினேஷ் சந்திமாலும் ஜோடி சேர்நது துடுப்பெடுத்தாட விக்கெட்டுகள் சரியாது ஓட்டங்கள் குவியத் தொடங்கியது.

எனினும் 13 ஆவது ஓவரின் முதலாவது பந்து வீச்சை எதிர்கொண்ட தனஞ்டிய டிசில்வா, பந்தை சிக்ஸருக்கு தூக்க முயன்றார். எனினும் பந்‍தை எல்லைக் கோட்டுக்கு அருகில் நின்று சாமர்த்தியமாக பிடித்தார் சமிக கருணாரத்ன.

இதனால் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் 5 ஆவது விக்கெட் 70 ஓட்டங்களுக்கு பறிபோனது.

ஒரு கட்டத்தில் போட்டியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 52 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந் நிலையில் சந்திமால் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாச இறுதி ஓவரில் 13 ஓட்டம் வெற்றிக்கு என்ற நிலையானது.

இறுதி ஓவருக்காக தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணிக்காக சமிக கருணாரத்ன பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட சந்திமலினால் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இதனால் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது.

கொழும்பு அணிக்காக இறுதி வரை போராடிய சந்திமால் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 65 ஓட்டங்களை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ், ஜப்னா கிங்ஸை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துள்ளது.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46