அதிர்ச்சியளிக்கும் அரசாங்கத்தின் உத்தேச சுற்றுலா சட்டமூலம் - சஜித்

Published By: Digital Desk 3

11 Dec, 2021 | 03:44 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாச்சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டுமெனில், அதற்குத் தனியார் துறையினரின் ஆலோசனைகளும் போதியளவில் பெறப்படவேண்டியது அவசியமாகும். 

இருப்பினும் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சுற்றுலாச்சட்டம், தனியார்துறையினரை வெறுமனே 'அவதானிப்பாளராக' மாத்திரம் வரையறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.

இந்த உத்தேச சட்டமூலம் சில நபர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளமையை அதன் உள்ளடக்கங்கள் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகின்றது என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவத,

2019 ஆம் ஆண்டு வரை லோன்லி ப்ளனெட், த நியூயோர்க் டைம்ஸ் உட்பட பல மதிப்புவாய்ந்த வெளியீடுகளால் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சுற்றுலா முறைமையை மேம்படுத்தல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, உலகத்தரம்வாய்ந்த ஹோட்டல்கள், இலங்கையின் இயற்கை அழகு என்பன இதற்குப் பங்களிப்புச்செய்தன.

இருப்பினும் நாட்டிற்கான அந்நியச்செலாவணியின் பிரதான கூறான இச்சுற்றுலாத்துறை உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களாலும் அதன்பின்னரான கொரோனா வைரஸ் பெருந்தொற்றினாலும் வெகுவாகப் பாதிப்படைந்தது. 

தொற்றுப்பரவலையடுத்து நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் பயிற்சி குறைவான தொழிலாளர்களில் 36 சதவீதமானோரும், ஓரளவு பயிற்சிபெற்ற தொழிலாளர்களில் 36 சதவீதமானோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாத் தொழிற்துறையின் சேவைப்படையணியில் 41 - 60 சதவீதம் வரையானோர் தமது பணிகளை இழந்துள்ளனர்.

2020 ஜனவரி - டிசம்பர் வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 507,704 ஆகும். தொற்றுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் 1.9 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

அதனுடன் ஒப்பிடுகையில் 2020 இல் வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 73.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 90 சதவீதத்திற்கும் அதிகமான முறைசார் விற்பனை நிலையங்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமான முறைசாரா விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்களில் ஏற்பட்ட தாக்கத்தினால் இலட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் சுற்றுலாத்துறையில் மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். 

எனவே உரிமம் பெற்ற வணிக வங்ககளிடமிருந்து இரு ஆண்டுகள் சலுகைக்காலத்துடன் 10 வருடகாலத்திற்கு சுற்றுலாத்துறையினால் பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கும் கடன் தாமத சலுகைக்காலத்தில் 2019 ஏப்ரல் தொடக்கம் 2022 ஜுன் 30 வரையிலான நீண்டகாலக் கடன்களுக்கான மொத்த வட்டியைத் தள்ளுபடி செய்வதற்கும் மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட கடன் மறுசீரமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அதேபோன்று மத்திய வங்கி நாணயச்சபையின் பரிந்துரைக்கு அமைவாக சுற்றுலாத்துறையின் மொத்தக்கடன் தொகையான 350 பில்லியன் ரூபாவை மறுசீரமைப்பதற்கும் 2020 ஜுன் 10 ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரமளிக்கப்பட்ட சலுகைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2020 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தில் சுமார் 12 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின் இறுதியிலும் இத்தகைய இழப்பு ஏற்படும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கத்தினால் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கு அவசியமான செயற்திட்டங்கள் தெளிவான காலக்கெடுவுடன் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாச்சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டுமெனில், அதற்குத் தனியார் துறையினரின் ஆலோசனைகளும் போதியளவில் பெறப்படவேண்டியது அவசியமாகும். 

இருப்பினும் தற்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சுற்றுலாச்சட்டமூலம், தனியார்துறையினரை வெறுமனே 'அவதானிப்பாளராக' மாத்திரம் வரையறைத்திருப்பதுடன் சுற்றுலாத்துறை மீதான ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் அரச நிறுவனங்களிடம் கையளிக்கும் வகையில் அமைந்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. 

ஆகவே இந்த உத்தேச சட்டமூலம் சில நபர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்று எதிர்க்கட்சித்தலைவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46