எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு  : எரிவாயு சிலிண்டர்களை நிறுவனங்கள் மீள பெறுவது கட்டாயம் - அழகியவன்ன

10 Dec, 2021 | 05:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு  சிலிண்டருடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் குறித்து ஆராயும் குழுவினரது அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

4 ஆம் திகதிக்கு முன்னர் சந்தைக்கு விநியோகித்துள்ள எரிவாயு சிலிண்டர்களை நிறுவனங்கள் மீள பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

சமையல் எரிவாயு சிலிண்டருடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது. 

சந்தைக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறத்தில் முத்திரை(சீல்) இடப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஒரு சில பகுதிகளில் பதிவாகியுள்ளது.

அச்சம்பவம்  குறித்து குழுவினரால் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பாதுகாப்பு தரம் உறுதிப்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு கசிவு ஏற்படுவதற்கான காரணம் ஆராயப்படுவது அவசியமாகும்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு கசிவு ஏற்படும் போது அதனை நுகரும் உணர் திறனை தூண்டும் எதில் மகர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 14 சதவீத அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும்,ப்ரோப்பேன்,பியூட்டென் கலவை 70:30 என்ற வீதத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிறுவனங்கள் மீள பெற வேண்டும். எரிவாயு விநியோக முகவர் நிலையங்களில் உள்ள எரிவாயு சிலிண்டர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உரிய நிறுவனங்களுக்கு உண்டு.

எரிவாயு சிலிண்டருடனான தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் குழுவினரது அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01