தீர்வு காணும் நோக்கம் சுதந்திரக்கட்சிக்கு இல்லை : அவர்களின் செயற்பாடுகளில் தெளிவு என்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க

10 Dec, 2021 | 04:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பல்வேறு கொள்கைளை கொண்ட அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு. 

பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது என்பதை அவர்களின் செயற்பாடுகள் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் பயனை நாட்டு மக்கள் அடுத்த ஆண்டு முதல் உணர்ந்துக் கொள்வார்கள். 

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்தினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் இருந்து மீளும் வகையில் அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளது.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது பிரதான இலக்காக உள்ளது. இறக்குமதி பொருளாதாரத்தில் இருந்து மீள வேண்டுமாயின் கடுமையான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பல்வேறுப்பட்ட அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானது. 

முரண்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு பெற்றுக் கொள்ள முடியும்.பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும்,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து வேறுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கம் சுதந்திர கட்சிக்கு கிடையாது என்பதை அவர்களின் செயற்பாடுகள் ஊடாக விளங்கிக் கொள்ள முடியும். அரசாங்கத்தில் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளையும் ஒன்றினைத்து  அரசியல் ரீதியில் முன்னேற்றமடைய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38