இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் இனிவரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படும் - நிதியமைச்சர்

Published By: Vishnu

09 Dec, 2021 | 07:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் இனிவரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரசாயன உரம் மற்றும் இரசாயன கிருமிநாசினி இறக்குமதிக்காக தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலைபேறான விவசாயம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது. நிலைப்பேறான விவசாய கொள்கையை செயற்படுத்துவதற்காக  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் ஊடாக நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது வெளிநாட்டு கையிருப்பு பிரதான பிரச்சினையாகவுள்ளது. அரசாங்கத்திடமிருந்த கையிருப்பு அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து, எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும், அரச முறை கடன்களை மீள செலுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பால்மா மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்திக்காக வரவு –செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08