இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் மீட்பு

Published By: Digital Desk 3

09 Dec, 2021 | 05:03 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆழ்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த இலங்கை மீன்பிடி படகொன்று இந்திய மீன்பிடி படகினால் மீட்க்கப்பட்டு, அதிலிருந்த 4 மீனவர்களும் காப்பற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும், அதேபோல இருநாடுகளினதும் மக்களுக்கும் இடையே உள்ள நல்லெண்ணத்தையும் நட்புறவையும் பிரதிபலிக்கும் வகையிலான மனிதாபிமான சமிக்ஞையாக ஆபத்தில் சிக்கியிருந்த இலங்கை மீனவர்களையும் அவர்களது படகையும் இந்திய மீன்பிடிக் படகு மீட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

IMUL-A-0039-TLE என்ற பதிவு எண்ணைக் கொண்ட Lulu-01 இலங்கை மீன்பிடிக் படகு கடந்த 2 ஆம் திகதி ஆழ்கடலில் பாரிய ஆபத்தை எதிர்கொண்டிருந்த்தது. சென்னைக்கு வடக்கே 24 கடல் மைல் தொலைவிலிருந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இதனை அவதானித்துள்ளது.

இலங்கைக் படகினதும் அதிலிருந்தவர்களினதும் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டு, அதனை காட்டுப்பள்ளியிலுள்ள அதானி துறைமுகத்துக்கு  வெற்றிகரமாக இழுத்துச் சென்றது. 

இலங்கை படகிலிருந்த நான்கு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46