வரவு - செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று

Published By: Digital Desk 4

09 Dec, 2021 | 04:07 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதிநாள் விவாதமாக நிதி அமைச்சு மீதான விவாதம் இன்றைய தினம் நடத்தப்படவுள்ள நிலையில் இறுதி வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன்,  அதன்  இரண்டாவது வாசிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  நவம்பர் மாதம் 13 ஆம் திகதி சனிக்கிழமை முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏழு நாட்கள், வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையிலேயே அன்றைய தினம் பிற்பகல் 5  மணிக்கு  இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

2022ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 23ஆம் திகதி குழு நிலையிலான விவாதம் இடம்பெற்று, சனிக்கிழமை உள்ளடங்கலாக 9 ஆம் திகதி  வரை 15 நாட்கள் அமைச்சுகளுக்கான விவாதமும் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் நிதி அமைச்சின் மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், மாலை 5 மணிக்கு மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இன்றைய தினம் எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை இலக்குவைத்து சபையில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிம் முக்கியமான பல்வேறு விடயங்களை சபையில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இன்றைய வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இப்போதே அரசாங்கம் தயார்ப்படுத்தியுள்ளதாகவும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04