இலங்கை இராஜாங்க அமைச்சுக்கு ஐ.நா. விருது

Published By: Gayathri

09 Dec, 2021 | 02:46 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் சபையினால் உலகலாவிய தன்னார்வத் தொண்டு மற்றும் அதில் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான சமூக தாக்கத்திற்காக வழங்கப்படும் 'UNV 50' விருது அரச துறை சார்பில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் சார்பில் அதன் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க காலி முகத்திடல் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அதனால் பொதுமக்கள் பெற்றுக்கொண்ட சிறந்த பிரதி பலன்களுக்காக இந்த விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

வீதி புனரமைப்பு மற்றும் மேம்பாடு, கிராமப்புற பாலங்களின் கட்டுமானம் மற்றும் மேம்பாடு, மர நடுகை திட்டம், 'சாலையோரத்தில் நிழல்' நடமாடும் சேவை, பாலம் வடிவமைப்பு போட்டித் துறைகளில் அளிக்கப்பட்ட பங்களிப்பு என்பவற்றைக் அடிப்படையாகக்கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை அமைப்பைப் பயன்படுத்தி நாடு முழுவதும் விவசாயம் மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்துக்கு உயர் மட்ட அணுகலை வழங்கி, நாடளாவிய ரீதியில் கிராமப்புறங்களில் வீதி புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த வேலைத்திட்டம் இதுவரையில் நாடளாவிய ரீதியிலுள்ள 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படுகிறது.

அத்தோடு மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதை இலக்காகக் கொண்டு 4 வருடங்களில் 5,000 பாலங்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

அபிவிருத்திகளை திட்டமிடும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அவதானம் செலுத்தப்படுகிறது. அதற்கமைய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டாகும்போது வீதிகளில் இரு மறுங்கிலும் மற்றும் பொது இடங்களிலும் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புற பாலங்களை நிர்மாணிக்கும் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினருக்கும் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், திட்டத்தின் தொழில்நுட்ப சவால்களைப் பற்றி விவாதிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இது சகல தரப்பினரதும் தொழிநுட்ப திறனை மேலும் மேம்படுத்தும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58