பிரியந்த படுகொலை : பாகிஸ்தான் பிரதமருக்கு சட்டத்தரணிகள் சங்கம் எழுதிய அவசர கடிதம்

Published By: Digital Desk 4

08 Dec, 2021 | 08:45 PM
image

(நா.தனுஜா)

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார தியவதன மிகமோசமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வித பக்கச்சார்புமற்ற முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இவ்விசாரணைகள் குறித்து தாம் உன்னிப்பாகக் கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? ஜனாதிபதியிடம் இலங்கை ...

இதுகுறித்து இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஊடாக அந்நாட்டுப்பிரதமர் இம்ரான்கானுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டத்தரணிகள் சங்கம் இலங்கையிலுள்ள 21 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மீயுயர் கட்டமைப்பாகும்.

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் கடந்த 3 ஆம் திகதி இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார தியவதன மிகமோசமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.

இந்த மிலேச்சத்தனமான படுகொலையை உடனடியாகக் கண்டனம் செய்த உங்களுடைய நடவடிக்கையைப் பாராட்டுகின்றோம்.

அதேவேளை பிரியந்த குமார தியவதனவின் படுகொலை தொடர்பில் எவ்வித பக்கச்சார்புமற்ற முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் சட்ட அமுலாக்கக்கட்டமைப்புக்களையும் வலியுறுத்துகின்றோம்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கவேண்டியதன் அவசியத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதுடன் அதற்காக நாம் பாகிஸ்தான் சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவியையும் நாடியிருக்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38