புதிய கொவிட் பிறழ்வுகள் தோற்றம் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் - விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி

Published By: Gayathri

08 Dec, 2021 | 06:58 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எதிர்காலத்தில் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அவை அனைத்திற்கும் சுகாதார அமைச்சு தயாராகவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போது நாட்டில் நாளாந்தம் 700 - 750 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனினும் 350 - 400 பேர் மாத்திரமே குணமடைகின்றனர். அது மாத்திரமின்றி 20 - 25 மரணங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது நாடளாவிய ரீதியில் 159 சிகிச்சை நிலையங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் 17,155 சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளபோதிலும், 7,669 தொற்றாளர்கள் மாத்திரமே சிகிச்சைபெற்று வருகின்றனர். 

அதேபோன்று 77 பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த 159 சிகிச்சை நிலையங்களிலும் 110 - 120 ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்கள் உள்ளனர்.

இவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளபோதிலும், எதிர்காலத்தில் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அவை அனைத்திற்கும் சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது. 

எனினும் எந்த பிறழ்வு தோற்றம் பெற்றாலும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஒரே வழிமுறை சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதாகும்.

பல சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், மக்கள் அதனைப் பின்பற்றுவதில்லை. எனவே அபாயத்தை உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58