இலங்கை எந்தவொரு வெளிப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது - வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 3

08 Dec, 2021 | 03:42 PM
image

(எம்.மனோசித்ரா)

பலமான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் வலுவாக முன்னோக்கிச் செல்லும் இவ்வேளையில் இலங்கை எந்தவொரு வெளிப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைச்சர் ஷக் அப்துல்லா அல்-நஹ்யான் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்  பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டின் பக்க அம்சமாக, அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும்  ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைச்சர் ஷேக் அப்துல்லா அல்-நஹ்யான் ஆகியோருகிடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அதிகமான தொழில் வாய்ப்புக்களை வழங்குவது குறித்து இரு அமைச்சர்களும் குறிப்பாக வலியுறுத்தினர். 

எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு, ஐக்கிய அரபு இராச்சியத்தின்  நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச அரங்குகளில் இணைந்து பணியாற்றுதல் ஆகியன குறித்தும் இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்குமிடையிலான உயர்மட்ட விஜயங்களின் மூலம் நட்புறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியதோடு, அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்தார். 

பலதரப்பு மன்றங்களிலும் குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு வழங்கும் ஆதரவை  எப்போதும் மதிப்பதாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

பலமான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் வலுவாக முன்னோக்கிச் செல்லும் இவ்வேளையில் இலங்கை எந்தவொரு வெளிப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது என்பதையும் அமைச்சர் ஜீ.எல்பீரிஸ் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17