தேசிய பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு குறித்து பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபையில் அவதானம்

Published By: Digital Desk 3

08 Dec, 2021 | 02:10 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தற்போதைய பாதுகாப்புப் பிரிவினரின் அவதானத்துக்கு இலக்காகியுள்ள விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் ஆலோசனை சபை கூடியது.  

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபைத் தலைவர் என்ற ரீதியில், இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை, சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன மற்றும் ஆளுங்கட்சியின் பிரமத கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தற்போதைய பாதுகாப்புப் பிரிவினரின் அவதானத்துக்கு இலக்காகியுள்ள விடயங்கள் தொடர்பில், அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் அதிகாரிகள், இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55