நுவரெலியா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

08 Dec, 2021 | 12:58 PM
image

 (.கிஷாந்தன்)

நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே மெனிகாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மகள் மற்றும் மருமகன்களுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு உறங்கிக் கொண்டிருந்த தாய் காலையில் பார்க்கும் பொழுது வீட்டில் இல்லை என உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீட்டிற்கு அருகில் உள்ள பிளாக்பூல் ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21