கால்பந்தாட்டப் போட்டி : டிபெண்டர்ஸ் எவ்சி மற்றும் நியூ யங்ஸ் அணிகள் வெற்றி

Published By: Gayathri

08 Dec, 2021 | 11:48 AM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2 சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் டிபெண்டர்ஸ் எவ்சியும் வென்னப்புவை நியூ யங்ஸும் இறுக்மான வெற்றிகளை ஈட்டின.

ரட்ணம் கழகத்துக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற முதலாவது போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்சி 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியின் 41ஆவது நிமிடத்தில் இடதுபுறத்திலிருந்து சஜித் குமாரவின் ப்றீ கிக் பந்தை நோக்கி தாழ்வாக தாவிய லக்சித்த ஜயசிங்க தலையால் முட்டி டிபெண்டர்ஸ் எவ்சியின் முதலாவது கோலைப் போட்டார்.

இடைவேளையின் பின்னர் 48 ஆவது நிமிடத்தில் டிபெண்டர்ஸ் எவ்சி வீரர் ரிப்கான் மொஹமதை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து மொஹமத் ஹக்கீம் முரணான வகையில் வீழ்த்தியதால் டிபெண்டர்ஸ் எவ்சிக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அதனை ரிப்கான் மொஹமத் கோலாக்கி, டிபெண்டர்ஸ் எவ்சியை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து ரட்ணம் கழகம் எதிரணியின் கோல் எல்லையை ஆக்கரமித்த வண்ணம் விளையாடியது.

போட்டியின் 78ஆவது நிமிடத்தில் ஏ.பி. சித்திரகுமாரை சஜித் குமார பின்னாலிருந்து தள்ளியதால் ரட்ணம் கழகத்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அதனை ஹக்கீம் கோலாக்கினார்.

அதன் பின்னர் மேலதிமாக கோல் போடப்படாத நிலையில் டிபெண்டர்ஸ் எவ்சி 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

கடுமையான மோதலுக்கு மத்தியில் நியூ யங்ஸ் 2 - 1 என வெற்றி சுகததாச அரங்கில் கடுமையாக மோதிக்கொள்ளப்பட்ட மற்றொரு போட்டியில் புளூ ஈக்ள்ஸை 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் நியூ யங்ஸ் வெற்றிகொண்டது.

இப் போட்டியில் முரணான ஆட்டத்தை வெளிப்படுத்தியமையே புளூ ஈக்ள்ஸின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

போட்டியின் 38ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் கோல்காப்பாளர் குருகுலசூரய உதைத்த பந்தைப் பெற்றுக்கொண்ட ருமேஷ் மெண்டிஸ் வலதுபுறமாக ஓடிய முஷிகானுக்கு பரிமாற அவர் அதனை கோலாக்கினார்.

சற்று நேரத்தில் நியூ யங்ஸுக்கு கிடைத்த பெனல்டியை பெர்னாண்டோ தவறவிட்டார்.

இடைவேளையின் பின்னர் 54ஆவது நிமிடத்தில் பின்கள வீரர் ரமேஷ் மெண்டிஸ் பந்தை இலாவகமாக நகர்த்திச் சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டு நியூ யங்ஸை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

போட்டி முடிவடைய 4 நிமிடங்கள் இருந்தபோது லசித் பெர்னாண்டோ கோல் ஒன்றைப் போட்டு புளூ ஈக்ள்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

எனினும் இறுதியில் நியூ யங்ஸ் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09