அனுராதபுரம் கல்கிரியாகம புபோகம பகுதியில் ஜீப் ஒன்றில் மோதுண்டு இரு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.

மிகவும் வேகமாக பயணித்த ஜீப் வண்டியின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் அருகில் உள்ள மரத்தில் மோதியுள்ளார்.

மரத்தில் மோதிய ஜீப் வண்டி பின்னர் வீதியில் குழந்தையுடன் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்கள் மீது மோதியுள்ளது.

அநுராதபுரம் பத்தாகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய அமராவதி மற்றும் 24 வயதுடைய நிரோஷினி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குழந்தை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.