பாவனையின் பின்னர் வீசப்படும் பேனைகளால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்புகள்

Published By: Vishnu

08 Dec, 2021 | 08:46 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்திய பின்னர் வீசப்படும் பேனைகளால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகவும்,  இது தொடர்பாக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு ,வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு,கடல்தொழில் அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் மீதான திருத்தங்கள், தெளிவுபடுத்தலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதியின் சௌபாக்கிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்க நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இலங்கை சுற்றுச் சூழலை பாதுகாத்தவர்கள் இருந்த நாடாகும். வரலாற்றில் இது தொடர்பாக இருக்கின்றன. இவ்வாறான நாட்டில் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கதைக்க வேண்டியுள்ளது. இப்போதுள்ள சந்ததி அது தொடர்பாக அக்கறை கொண்டுள்ளனரா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதில் மரம் வளர்த்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

இந்நிலையில் ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடிய பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். 

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான செசே பக்கற்றுகளை தடை செய்துள்ளோம். அந்தப் பக்கற்றுகளால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவை சூழலில் 100 வருடங்களானாலும் அழிவடையாது. இதன்படி 18 வகையான பொலித்தீன்களுக்கு தடை விதித்துள்ளோம். அதேபோன்று உக்காத லஞ்சீட் பாவனையையும் கட்டுப்படுத்தியுள்ளோம். இதனை முற்றாக தடை செய்ய தேவையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். இதற்காக சட்ட விதிகளை நாங்கள் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு பதிலான மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். இதுவரையில் யாரும் அவதானம் செலுத்தாத விடயமாக பாவித்த பேனைகள் தொடர்பில் பிரச்சனைகள் உள்ளன. பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் பெருமளவான பேனைகள் சூழலில் போடப்படுகின்றன. இது தொடர்பாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அலுவலகங்களில் இதற்காக வேறான பெட்டிகளை பயன்படுத்தி அவற்றை பெற்று மீள் சூழற்சி செய்யவும், பாதுகாப்பான முறையில் அவற்றை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக பாடாசலைகளில் மாத்திரம் 90 முதல் 100 கிலோ வரையில் சுற்றுச் சூழலுக்குள் போடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை அழிவடைய 100 முதல் 400 வருடங்களாகும். இவை நிலத்திற்குள்ளேயே செல்லும். இதனால் பாடசாலைகளில் இது தொடர்பாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58