ஒமிக்ரோனை விட அபாயகரமான பிறழ்வுகள் ஏற்படலாம் - எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜனமான

Published By: Digital Desk 4

06 Dec, 2021 | 09:33 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒமிக்ரோன் பிறழ்வு கொரோனா தாக்கத்தை நிறைவுக் கொண்டுவரும் பிறழ்வு அல்ல. இதன் பின்னர் இதை விட அபாயமான பிறழ்வுகளும் ஏற்படக் கூடும்.

உலகலாவிய ரீதியிலான தொற்று பரவலில் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறுகின்றமை வழமையானதொரு விடயமாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜனமான தெரிவித்தார்.

ஒமிக்ரோன் பல நாடுகளில் பரவியுள்ளது : ஆபத்தானது என்கிறது உலக சுகாதார  ஸ்தாபனம் | Virakesari.lk

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகலாவிய ரீதியில் வைரஸ் தொற்று ஏற்படும் போது தொடர்ச்சியாக புதிய பிறழ்வுகள் உண்டாகின்றமை வழமையாக இடம்பெறும். அதற்கமையவே கொவிட் தொற்று தோற்றம் பெற்றதன் பின்னர், அல்பா, டெல்டா மற்றும் தற்போது ஒமிக்ரோன் ஆகிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டுள்ளன.

ஒமிக்ரோன் பிறழ்வு டெல்டாவை விட வேகமாக பரவக் கூடியதா என்பது இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. அதே போன்று எந்தளவிற்கு வேகமாகப் பரவும் என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இதுவரையில் எந்தவொரு நாட்டிலும் ஒமிக்ரோன் பிறழ்வால் மரணங்களும் பதிவாகவில்லை.

இதற்கு முன்னர் தோன்றிய டெல்டா பிறழ்வு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளமையால் , தற்போது இனங்காணப்பட்டுள்ள பிறழ்வு தடுப்பூசியினால் பெற்றுக் கொண்ட பாதுகாப்பையும் மீறி பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வகையான புதிய பிறழ்வாகக் காணப்பட்டாலும் அது பரவும் முறைமை மாறுபடாது. எனவே புதிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டாலும் அவை அதிகளவில் பரவாமல் இருக்கும் வகையில் செயற்பட்டால் பாதிப்புக்களையும் குறைத்துக் கொள்ளலாம். அத்தோடு இது கொரோனா தாக்கத்தை நிறைவுக் கொண்டுவரும் பிறழ்வு அல்ல. இதன் பின்னர் இதை விட அபாயமான பிறழ்வுகளும் ஏற்படக் கூடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08