ராஜபக்ஷ அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கிற்கு எவ்விதமான குறையும் வைக்கவில்லை - நிமல் லான்ஸா

Published By: Digital Desk 4

05 Dec, 2021 | 09:24 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)  

மூன்று தசாப்த யுத்தம் நிகழ்ந்த காரணத்தினால் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டது என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எமது அரசாங்கத்தில் வடக்கு கிழக்கிற்கு எந்த குறையும் வைக்கவில்லை என்பதை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா,சபையில் சுட்டிக்காட்டினார்.  

Articles Tagged Under: Nimal Lanza | Virakesari.lk

வடக்கு கிழக்கின் நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க, நாம் வாக்குறுதி வழங்கியதற்கு அமைய நடவடிக்கை எடுக்க அதற்கு தமிழர் தரப்பின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினைகளும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (4) இடம்பெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சு,போக்குவரத்து அமைச்சு ,தொழில் அமைச்சு,கிராமிய வீதிகள் ,ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு,வாகன ஒழுங்குறுத்துகை பேருந்து போக்குவரத்து சேவைகள், மற்றும் புகையிரத பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சு,வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள்  மீதான குழு நிலை விவாதம் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

அதிகார பரவலாக்கல் குறித்து எம்மத்தியில் எந்த முரண்பாடுகளும் இல்லை, வடக்கு கிழக்கின் நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க, நாம் வாக்குறுதி வழங்கியதற்கு அமைய நடவடிக்கை எடுக்க அதற்கு சுமந்திரன் போன்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினைகளும் இல்லை. அதேபோல் களனி மேம்பாலம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் கிண்ணியாவில் உயிர் இழக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஆனால் வடக்கு கிழக்கிற்கு எமது ஆட்சியில் குறை வைக்கவில்லை. எனினும் மூன்று தசாப்த யுத்தம் நிகழ்ந்த காரணத்தினால் அங்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டது என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போது எமது அமைச்சின் கீழ் வடக்கு கிழக்கில் எந்த குறைபாடுகளும் வைக்கவில்லை. அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னைய ஆட்சியில் முழுமையாக வடக்கு கிழக்கு கைவிடப்பட்டது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த நல்லாட்சியிடமே இவற்றை கேற்க வேண்டும். இன்று நாம் வடக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நாட்டில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிக்கும் குறை வைக்கவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சகலரும் கொவிட் வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. கொவிட் வைரஸ் பிரச்சினை நிறைவுக்கு வரும் என்றாலும் இப்போது புதிய வைரஸ் தொற்று குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே நெருக்கடிகளை நாம் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றோம். இவ்வாறான நிலையில் சவால்களுக்கு மத்தியில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இம்முறை வரவு செலவு திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அதேபோல் 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆண்டுக்குள் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டம் ஏதேனும் உள்ளதென்றால் அதனை தெரிவிக்க வேண்டும்.

இவர்கள் முன்னெடுத்த சகலதும் நல்லாட்சிக்கு முன்னர் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களாகும்.

அதனையே நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்தது. எனவே வீதி அபிவிருத்திக்கான யுகம் என்றால் அது மஹிந்த ராஜபக் ஷ யுகமேயாகும். எனினும் நல்லாட்சியில் சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் கைவிடப்பட்டது.

உலக வங்கி மற்றும் ஆசிய வங்கியின் நிதி உதவிகள் எமக்கு கிடைத்துள்ளது, ஆகவே இந்த ஆண்டுக்காக 92 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை கொண்டு 20 ஆயிரம் கிலோமீட்டர் வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுப்போம். ஆனால் கொவிட் வைரஸ் தொற்று காரணாமாக நாடு நெடுக்கடிக்குள் வீழ்ந்தால் அதனை நிறைவுசெய்ய முடியாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13