பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இராணுவ தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவிப்பு  

Published By: Digital Desk 4

05 Dec, 2021 | 08:09 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமானது, மத அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்டிராத, ஒரு இடத்தில் நடந்த தனிமையான சம்பவம் என இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வா குறிப்பிட்டார். 

Articles Tagged Under: ஜெனரல் சவேந்திர சில்வா | Virakesari.lk

எனவே  பாகிஸ்தானில் வசிக்கும் ஏனைய இலங்கையர்களோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களோ வீணாக, அச்சம்பவத்தை மையப்படுத்தி அச்சம் கொள்ளத் தேவை இல்லை என அவர் குறிப்பிட்டார்.

 இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல் செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இலங்கையர்களாகிய நாம்  அறிவுபூர்வமாக நடந்துகொள்ளும் தேசவத்தவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்த  இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா ஞாயிற்றுக்கிழமை ( 5) தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர்,  மேற்படி விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 ' இந்த சம்பவம் மிகக் கொடூரமானது. மிலேச்சத்தனமானது. இது தொடர்பில் எடுக்க  வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துரையாடியுள்ளனர்.

 அத்துடன் பாகிஸ்தானின் முப்படைத் தளபதி தொலைபேசியில் என்னுடன் கலந்துரையாடினார். இந்த சம்பவம் தொடர்பில் தற்போதும் 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு உச்ச பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந் நாடு இருப்பதாகவும் அவர்  என்னிடம் தெரிவித்தார்.' என இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வா கூறினார்.

எவ்வாறாயினும் தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்தார்.

தற்போது பாகிஸ்தானில் 400 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04