பாகிஸ்தானிய அடிப்படைவாத தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது  

Published By: Digital Desk 3

04 Dec, 2021 | 08:18 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட இலங்கை பிரஜையான  பிரியந்தகுமார மீதான அடிப்படைவாத வன்மத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஆளுந்தரப்பு சபையில் பதிவு செய்தது.

பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து எரித்துக்கொல்லப்பட்ட இலங்கை பிரஜை விவகாரம் குறித்து நேற்று சனிக்கிழமை, பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியது. 

இது குறித்து பாராளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார,

பாகிஸ்தானில் துரதிஷ்டவசமாக ஒரு மரணம் நேர்ந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்ற பிரியந்தகுமார, பாகிஸ்தானில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றியவர்.

அவர் உயரிய பதவியிலும் இருந்தார். அவரை பாகிஸ்தானில் ஒரு இனக்கும்பல் ஒன்றுசேர்ந்து நடுவீதியில் தாக்கி எரித்து கொன்றுள்ளனர். 

முற்றுமுழுதாக  இது மத அடிப்படைவாத வெறித்தனத்தில் இடம்பெற்ற தாக்குதலாகும். மதத்துடன் தொடர்புபட்ட பதாகை ஒன்றினை நீக்கினார் என்ற காரணத்திற்காக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த விடயம் குறித்து பாகிஸ்தானில் உள்ள எமது தூதரகம் செயற்படும் விதம் பலவீனமானது. இப்போதும் அதிகளவான இலங்கையர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். 

அதேபோல் இந்த சம்பவம் குறித்து பாகித்தானிய பிரதமர் தனது வருத்தங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அடிப்படைவாத தரப்பிடம் மாட்டிகொண்டு எமது இலங்கையர்கள் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகையில்,

எல்லைகளுக்கு உற்பட்ட அடிப்படைவாதிகளினால் அடித்துக்கொல்லப்பட்டுள்ள பிரியந்தகுமார என்ற இலங்கையரின் மரணத்தை நாம் நாடாக முழுமையாக கண்டிக்கின்றோம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு வருகைதந்து இலங்கையுடன் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். 

அதையும் தாண்டி 2005 ஆம் ஆண்டில் இருந்தே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நாம் கையாண்டு வருகின்றோம். இவ்வாறான நட்புறவை சீர்குலைக்கு விதமாக இந்த அடிப்படைவாத செயற்பாடுகள் அமைந்துள்ள காரணத்தினால் சபாநாயகர் அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் கலந்துரையாடி, பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கும் இதனை கொண்டு சென்று அவதானம் செலுத்த வலியுறுத்தி, இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கவும், பாகிஸ்தானில் உள்ள ஏனைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அச்சமின்றி பணியாற்றும் நடவடிக்கையை முன்னெடுக்க ஈடுபட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நேற்று காலையில் விசேட கூற்றொன்றை முன்வைத்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இது குறித்து கூறுகையில்,

உள்ளக  அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த, பாகிஸ்தானிய தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய முகாமையாளர் பிரியந்த குமாரவின் மரணத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36