எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Published By: Gayathri

04 Dec, 2021 | 02:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய  நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விநியோக சேவையினை முன்னெடுக்கிறது. 

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளாவிடின் எரிபொருளுக்கான வரியை குறைக்குமாறு நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். நட்டமடைந்த நிலையில் தொடர்ந்து சேவையை முன்னெடுத்து செல்வது கடினமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கபடாத காரணத்தினாலும், ஏனைய காரணிகளினாலும் இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் கடந்த 10 மாத காலத்திற்குள் மத்திரம் 7000 ஆயிரம் கோடி நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது.

அத்துடன் இலங்கை வங்கிக்கும், மக்கள் வங்கிக்கும் சுமார் 400 கோடி வரையில் கடன் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது அக்கடன் தொகை பகுதி பகுதியாக செலுத்தப்பட்டு வருகிறது. பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை நிவாரண விலைக்கு விநியோகிக்கப்படுகிறது.

எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது.

அவ்வறான நிலையில் ஒன்று எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருள் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்தாலும் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை தற்போதைய நிலையில் குறைக்க முடியாது.

எரிபொருளின் விலையை நிலையாக பேணும் நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31