புதிய ஜப்பான் தூதுவர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

Published By: Digital Desk 3

04 Dec, 2021 | 11:34 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மிசுகோஷி ஹிடேகி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்தார். 

1951 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு திட்டத்தின் கீழ் பல துறைகளில் ஜப்பான் இலங்கைக்கு விரிவான உதவிகளையும் பயிற்சி வாய்ப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

சென் பிரான்ஸிஸ்கோ சமாதா மாநாட்டில் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க உரையை தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கமும் அதன் மக்களும் இலங்கைக்கு ஒற்றுமையின் அடையாளமாக பெரிதும் உதவியுள்ளனர். 

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையானது இரு நாடுகளுக்கும் இடையில் நீடித்த நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய குறிப்பிடத்தக்க பரிசுகளில் ஒன்றாகும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டம், களனி ஆற்றின் மீது புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் மற்றும் அநுராதபுர நீர் வழங்கல் திட்டம், கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டம் போன்ற ஜப்பானிய நிதியில் இலங்கையில் அண்மை காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார். 

ஜப்பான் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புவி சார்ந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டத்தை டிஜிட்டல் மயமாக்குவதானது பெரும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை மக்களின் உண்மையான தேவைகளை ஜப்பான் அரசாங்கம் எப்போதும் நிவர்த்தி செய்து வருகிறது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா 2022 ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் அரசாங்கம் செய்துள்ளது. இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டுக்கு விஜயம் செய்யவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51