மாத்தறை - வெலிகம நகரில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாத போதிலும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.