எதிர்க்கட்சிக்கு 'சீன மேனியா' நோய் தொற்றியுள்ளது - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 3

03 Dec, 2021 | 11:49 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சீனாவுடன் நாம் வர்த்தக உறவை முன்னெடுப்பதில் தவறேதும் இல்லை, எமது அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நிலத்தையோ வளத்தையோ எவருக்கும் விற்கப்போவதில்லை. ஆனால் எதிர்கட்சியினருக்கு இன்று சீன மேனியா நோய் தொற்றியுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற துறைமுகங்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

 அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவந்து அடுத்த ஆண்டில் கட்டம் கட்டமாக அதன் பணிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் தெற்கு மற்றும் மேற்கு முனையங்களை எமக்கான துறைமுக முனையங்களாக மாற்றுவோம்.

எதிர்கட்சியினருக்கு 'சீன மேனியா' நோய் உள்ளது. நாம் சீனாவுடன் வியாபார வர்தக உறவை மேற்கொள்ளக்கூடாதா, அதில் என்ன தவறு உள்ளதென தெரிவிக்க வேண்டும். நாம் நிலத்தையோ வளத்தையோ எவருக்கும் விற்கவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காக இவற்றை பயன்படுத்திக்கொள்ளவே முயற்சிக்கின்றோம்.

கொழும்பு துறைமுகத்தை மட்டுமல்ல, காலி துறைமுகம், திருகோணமலை இயற்கை துறைமுகம் ஆகியவற்றையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். 

சுற்றுலாத்துறையை கவரும் மிகவும் முக்கிய துறைமுகமாக காலி துறைமுகத்தை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், கொரியாவுடன் இது குறித்து கலந்துரையாடி வருகின்றோம். திருகோணமலை துறைமுகத்தையும் அதேபோல் வர்த்தக துறைமுகமாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02